தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புவி அறிவியலில் புதிய வாய்ப்புகள்

புவி அறிவியலில் புதிய வாய்ப்புகள்

புவி அறிவியலில் புதிய வாய்ப்புகள்


செப் 05, 2009 12:00 AM

செப் 05, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 05, 2009 12:00 AM செப் 05, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருகிறது. இது புவி அறிவியலிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

புவி அறிவியல் அமைச்சகமும் கடல் ஆய்வு முதல் வானிலை தொடர்பான பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இயற்பியல் வல்லுனர்களும் கடல், மலை தொடர்பான ஆய்வுகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். சூழல் தொடர்பான பிரச்னைகள் முக்கியத்துவம் பெற்று வருவதால், இயற்பியலில் முக்கியமான பிரிவாக இது உருவெடுத்துள்ளது.

பூமியின் இயற்பியல் கூறுகளை பற்றி படிப்பதே புவி அறிவியல் எனப்படுகிறது. இதில் ஓஷனோகிராபிக்ஸ், அட்மாஸ்பியரிக் பிசிக்ஸ், ஜியோபிசிக்ஸ், சீஸ்மாலஜி உள்ளிட்ட பாடங்கள் இடம்பெற்றுள்ளன. செயற்கைகோள் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் இந்த துறையில் தகவல்களுக்கு பஞ்சமில்லை. இவற்றை கொண்டு ஆராய நிபுணர்களின் தேவையே அதிக அளவில் உள்ளது. இயற்பியல், கணிதத் திறன் பெற்றவர்கள் இதற்கு அவசியம்.

இந்த துறையில் இந்தியா பெரிய அளவில் சாதிக்கவில்லை. உதாரணமாக இந்திய நதிகளின் சரியான மாதிரிகள் உருவாக்கப்படவில்லை. நதிகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டால் வெள்ளப்பெருக்கை தடுக்க உதவும். நிலத்தடி நீர் குறித்தும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்படவில்லை. இந்த துறையில் விஞ்ஞானியாக ஜியாலஜி, பேசிக் ஜியாலஜி, புவியியல், இயற்பியல், அட்மாஸ்பியரிக் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலையுடன், பி.எச்டி., படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். பி.எச்டி., நிறைவு செய்தவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

நாடு முழுவதும் புவி அறிவியல் மையங்கள் உள்ளன. கேரளாவில் உள்ள புவி அறிவியல் ஆய்வு மையத்தில், பூமி, கடல், சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகள் நடக்கிறது. www.moes.gov.in என்ற வெப்சைட் முகவரியில் புவிஅறிவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல் உள்ளது. இவற்றிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us