தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேனோ டெக் படிக்க விரும்புகிறீர்களா?

நேனோ டெக் படிக்க விரும்புகிறீர்களா?

நேனோ டெக் படிக்க விரும்புகிறீர்களா?


செப் 12, 2009 12:00 AM

செப் 12, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 12, 2009 12:00 AM செப் 12, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நேனோ டெக்னாலஜி துறை, ஆய்வு மனப்பாங்கு உள்ளவர்களுக்கான துறை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கமாக வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும் என்று விரும்புவோருக்கான துறை இதுவல்ல.

வாழ்நாள் முழுக்க ஆராய்ச்சியிலேயே ஈடுபட வேண்டும் என்று யாராவது விரும்பினால், இத்துறைக்கு வரலாம். நேனோ டெக்னாலஜி துறையைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி முழுமையாக அறிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான் உள்ளனர். ஒரு தலைமுடியின் சராசரி நீளம் 25 ஆயிரம் நேனோ மீட்டர். சிறிய அளவிலான பொருட்களைப் பற்றிய அறிவியல் துறையே நேனோ டெக்னாலஜி. குவான்டம் கோட்பாடு, நேனோ சார்ந்த துறை இது.

உயர் தரம், வேகம் இவையிரண்டும்தான் எதிர்காலத்தில் நேனோ டெக்னாலஜியின் தாரக மந்திரமாக இருக்கப் போகின்றன. இன்னும் 20-30 ஆண்டுகளில் இத்தொழில்நுட்பம் எங்கும் எப்போதும் ஆக்கிரமிக்கத் தொடங்கும்.

நேனோ டெக்னாலஜி மூலம் புதிய கண்டுபிடிப்புகளும் எளிதாக நடக்கும். உற்பத்தித் துறை மிக வேகமாகவும் நடக்கும். 1960களில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறையும், 1980களில் பயோடெக்னாலஜி துறையும் எந்த அளவுக்கு இருந்தனவோ, அதுபோல்தான், தற்போது இந்த துறை உள்ளது. முழுமையான ஒரு துறையாக இது இன்னும் பரிணமிக்கவில்லை. வளர்ச்சி அடைந்து வந்து கொண்டிருக்கும் துறையாக இருக்கிறது.

அதே சமயம் 2015ம் ஆண்டில் இத்துறை 50 ஆயிரம் கோடி முதலீடு கொண்ட துறையாக இருக்கும். இதில் 20 லட்சம் பேர் பணிபுரிவார்கள். இத்தொழிலை சார்ந்து இன்னும் மூன்று பங்கு பேர் பணிபுரிவார்கள். 1965ல் இயற்பியிலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்டு பைமேன், அணு அளவு கொண்ட இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியும் என்றார்.

1980களில் கிம் எரிக் டிரக்ஸலர் எனும் அமெரிக்க இன்ஜினியர், நேனோ டெக்னாலஜி எனும் வார்த்தையை அறிமுகம் செய்தார். சில நேனோ மீட்டர்களே உள்ள மூலக்கூறு அளவே உள்ள இயந்திரங்களைப் பற்றி அவர் விவாதித்தார். மணலில் உள்ள அணுக்களை நாம் பிரித்தெடுத்து கம்ப்யூட்டர் சிப்புகளை உருவாக்கியிருக்கிறோம்.

இத்துறை வளர்ந்தால் கழிவுநீர், தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளை பிரித்து நாம் உருளைக்கிழங்கு கூட உருவாக்கலாம். மருந்து குடிநீர் மூலம் உள்செலுத்தப்படும் நானோ துகள்கள் கேன்சர் செல்களையும் வைரஸ்களையும் அழித்து உடல்நலம் பெற வழிசெய்யும்.

இரும்பு தகடை விட அதிக வலிமை உள்ள ஷீட்டை ஒரு எக்டர் வரை பரப்ப 280 கிராம் இருந்தால் போதுமானது. நாம் அணியும் சாக்சில் கெட்ட துர்நாற்றம் வீசுவதைக் கூட தடுக்க முடியும். டாய்லட் கோப்பைகள் தாமாக சுத்தம் ஆகிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும்.

கத்தியின்றி, ரத்தமின்றி ஆப்பரேஷன்கள் செய்யவும் இத்துறை பயன்படும். ஒரு சிறிய ஜீனித் துகள் அளவிலான கம்ப்யூட்டர் தகவல் சேமிப்பு சாதனத்தில் கோடிக்கணக்கான பைட்ஸ் அளவிலான தகவல்கள் சேமிக்கப்படும்.

ஆராய்ச்சி மற்றும் படிப்புகளுக்கு...

பாபா அணு ஆராய்ச்சி மையம், மும்பை
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்,பெங்களூரு
இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சென்னை/ரூர்க்கி/மும்பை/டில்லி/கராக்பூர்
ஜவர்கலால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச், பெங்களூரு
நேஷனல் கெமிக்கல் லேபரேட்டரி, புனே
நேஷனல் பிஸிகல் லேபரேட்டரி, புதுடில்லி
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
ராமன் ஸ்கூல் ஆப் பிஸிக்ஸ், புதுச்சேரி
சாலிட் ஸ்டேட் பிஸிக்ஸ் லேபரேட்டரி, டில்லி
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்
டில்லி பல்கலைக்கழகம்
ஐதராபாத் பல்கலைக்கழகம்
புனே பல்கலைக்கழகம்
அமிட்டி இன்ஸ்டிடியூட் நேனோ டெக்னாலஜி நொய்டா
எம்.எஸ்சி., நேனோ சயின்ஸ்,
நேனோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கன்சோர்சியம்
நேனோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கன்சோர்சியம் நொய்டா, ஆறு மாத படிப்பு (தொலை தூரப் படிப்பு)
யுனிவர்சிட்டி ஆப் டில்லி 3 ஆண்டு படிப்பு ( எம்.டெக்., நேனோசயின்ஸ் அண்டு நேனோ டெக்னாலஜி)
சாஸ்திரா யுனிவர்சிட்டி, தஞ்சாவூர்.
எம்.டெக்., மெடிக்கல் நேனோ டெக்னாலஜி / நேனோ எலக்ட்ரானிக்ஸ்

 - பி.எஸ்.வாரியார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us