தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.ஐ.எம்.,ல் பொது மேலாண்மை

ஐ.ஐ.எம்.,ல் பொது மேலாண்மை

ஐ.ஐ.எம்.,ல் பொது மேலாண்மை


செப் 26, 2009 12:00 AM

செப் 26, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 26, 2009 12:00 AM செப் 26, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிர்வாகம், கொள்கை வகுத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை குறித்து இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.

பொது நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்களில் மூத்த நிர்வாக பொறுப்புகளை அடைய விரும்பும் நிபுணர்களுக்கு, பொது நிர்வாக திறன்கள் அவசியம். ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் ஒரு ஆண்டு முதுநிலை படிப்பாக பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட் வழங்கப்படுகிறது. கவர்னன்ஸ், பாலிசி பார்முலேஷன், இம்ப்ளிமென்டேஷன், இன்ப்ராஸ்டிரக்சர் டெவலப்மென்ட், பப்ளிக் என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட் ஆகிய பாடங்கள் இதில் இடம்பெறுகின்றன.

பொதுத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், அரசு நிர்வாகிகள், ஆட்சியியல் பணியாளர்கள் போன்றவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிர்வாக நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு எட்டுவார பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏழாண்டுகளுக்கு மேல் மேற்பார்வை, நிர்வாகம், மேலாண்மை பொறுப்புகளில் பணிபுரிந்த அனுபவம் அவசியம். 27 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

இந்த படிப்பை நிறைவு செய்தவர்கள் எர்ன்ஸ்ட் அண்டு யங், ஜி.எம்.ஆர்., ரிலையன்ஸ், மெக்கின்ஸ்லி போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற முடியும். தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 15 லட்சம் முதல் 40 லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு www.iimahd.ernet.in வெப்சைட்டை பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us