தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வணிக படிப்பின் முக்கியத்துவம் குறைகிறதா?

வணிக படிப்பின் முக்கியத்துவம் குறைகிறதா?

வணிக படிப்பின் முக்கியத்துவம் குறைகிறதா?


செப் 26, 2009 12:00 AM

செப் 26, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 26, 2009 12:00 AM செப் 26, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வணிகம் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றை புகழ் பெற்ற ஜே.டி. பிர்லா கல்வி நிறுவனம் நடத்தியது.

சமீப காலமாக வணிகப் படிப்பானது பிற கலைப் பிரிவுப் படிப்புகளைப் போலவே சராசரி பட்டப்படிப்பாக மாணவர்களால் கருதப்பட்டு வரும் நிலையில் இப்படிப்பு பற்றிய மதிப்பீட்டை மாற்றும் முயற்சியாகவே இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

வணிகத்தில் பட்டம் (பி.காம்.,) முடித்த பலரும் எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ளவே விரும்புகின்றனர். மிகச் சிலரே எம்.காம்., படிக்க விரும்புகின்றனர். சர்வதேச நிதிச் சிக்கல் காரணமாக இந்த மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பி.காம்., படிப்பதை விட மாணவர்கள் பி.பி.ஏ., படிப்புகளை விரும்பும் நிலை ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வணிகம் படிப்பவருக்கு எத்தனை விதமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் என்னென்ன படிப்புகளை அவர்கள் உயர் படிப்புகளாக மேற்கொள்ள முடியும் என்பதையும் விளக்கவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பெண்களை பங்குச் சந்தையில் ஈடுபடுத்தும் முயற்சியாக இக்கருத்தரங்கில் கிரெடெண்ட் கேபிடல் மார்க்கெட் நிறுவனத்தின் சார்பில் நிதிச் சந்தையின் வாய்ப்புகள் குறித்த முதற்கட்ட விளக்கங்கள் தரப்பட்டன. பொதுவாக இத்துறை பெண்களுக்கு ஏற்ற துறையல்ல என்னும் தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் பொறுமை, ஒருங்கிணைப்பு, குறைந்த அளவிலான தீவிர மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாகப் பெண்களால் பங்குச் சந்தையில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையில் இப்பயிற்சிகளை இந்த நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ள நிலையில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதால் வெளிநாடுகளில் கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கமும் இங்கு நடை பெற்றது. இதில் கோயங்கா கல்லூரி, செயின்ட் சேவியர், ஸ்ரீசிக்ஷயதன் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் பங்கு பெற்றன. வளர்ந்து வரும் இன்றைய நவீன யுகத்தின் தேவைகளை முறையான காமர்ஸ் படிப்புகளின் மூலமாக எவ்வாறு தருவது என்பது குறித்த உத்திகளும் இதில் விவாதிக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்களில் பலரும் சர்வதேச நிதிச் சிக்கலின் காரணமாக வணிக படிப்புகளுக்கு மந்த நிலை தற்போது காணப்பட்டாலும் விரைவில் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us