தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டெவலப்மென்ட் பைனான்ஸ் படிப்பு

டெவலப்மென்ட் பைனான்ஸ் படிப்பு

டெவலப்மென்ட் பைனான்ஸ் படிப்பு


அக் 03, 2009 12:00 AM

அக் 03, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 03, 2009 12:00 AM அக் 03, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலாண்மை படிப்புடன் நிதி வளர்ச்சி குறித்து கற்றுத்தருகிறது டெவலப்மென்ட் பைனான்ஸ்.   வளர்ச்சி பாதையில் நிதி ஆதாரங்களை பெருக்கிக்கொள்வது குறித்து இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கற்றுத்தரும் ‘டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் இன் டெவலப்மென்ட் அண்டு சஸ்டைனபிள் பைனான்ஸ்’ என்ற படிப்பை சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் பினான்ஷியல் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் அறிமுகம் செய்துள்ளது.   டெவலப்மென்ட் பைனான்ஸ் துறையில் உள்ள சிக்கல்களை புரிந்துகொள்ளவும், அவை குறித்து ஆய்வு செய்து தீர்ப்பது பற்றியும், கையிருப்பில் உள்ள நிதி ஆதாரங்களை வைத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் இதில் கற்றுத்தரப்படுகிறது. முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், வகுப்பறைகளில் கற்றுக்கொண்டவற்றை செயல்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு ஆகியவற்றில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேணடும். 85 சதவீதத்துக்கு மேல் கேட் மதிப்பெண் பெற்றிருப்பவர்களும் சேர்க்கைக்கு தகுதியுடைவயர்களே.   இந்தியா தனது வளர்ச்சி இலக்கை எட்ட கிராமப்புறம், சமூக முன்னேற்றம் குறித்து அறிந்த நிபுணர்களின் தேவை அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும். எனவே இந்த டிப்ளமோ படிப்பில் வளர்ச்சி நிர்வாகம் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. ஏழைகளுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பது குறித்த பாடங்களும் இடம் பெறுகின்றன.   இந்த டிப்ளமோ படிப்பை நிறைவு செய்தவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிராமப்புற வங்கிகளில் வேலைவாய்ப்பை பெற முடியும். ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு லட்ச ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us