தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விற்பனையை அதிகரிக்கும் பேக்கேஜிங்

விற்பனையை அதிகரிக்கும் பேக்கேஜிங்

விற்பனையை அதிகரிக்கும் பேக்கேஜிங்


அக் 03, 2009 12:00 AM

அக் 03, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 03, 2009 12:00 AM அக் 03, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு பொருளை அழகாக ‘பேக்கிங்’ செய்வது மூலமாக விரும்பப்படுவதாக மாற்ற இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.

போட்டி அதிகரித்துள்ள சூழலில், நுகர்வோரின் பார்வையை கவரும் வகையில் ஒரு பொருளை ‘பேக்கிங்’ செய்வது மிக அவசியமானது.

இதனால் இந்த துறை வேகமாக வளர்வதில் ஆச்சரியமில்லை. நிபுணர்கள் தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் பேக்கேஜிங் அண்டு பிரின்டிங் தொடர்பான படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. பேக்கேஜிங் டிசைன் அண்டு டெவலப்மென்ட், பிரின்டிங் அண்டு பேக்கேஜிங் மெஷினரி, குவாலிட்டி கன்ட்ரோல் தொடர்பான பாடங்கள் இதில் இடம்பெறுகின்றன.

மும்பையில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங், பேக்கிங் செய்வது குறித்து பல்வேறு படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. மூன்று மாத சர்டிபிகேட் படிப்பு, இரண்டாண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு, தொலைநிலை கல்வி ஆகியவை இதில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த துறை பிரபலமடைந்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்பும் பெருகி உள்ளது. அழகான பேக்கிங் ஒரு பொருளை சிறந்ததாக
காட்டுகிறது. இதனால் நிறுவனங்கள் பேக்கிங் தொடர்பான வல்லுனர்களை பணிக்கமர்த்துகின்றன. விற்பனை அதிகரிக்க பேக்கிங் முக்கியமான காரணம் என்பதை பெரிய நிறுவனங்கள் உணர்ந்துள்ளன.

மும்பையில் உள்ள எஸ்.ஐ.இ.எஸ்., ஸ்கூல் ஆப் பேக்கேஜிங்கில், பி.இ., படிப்பாக பேக்கேஜிங் அண்டு பிரின்டிங் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் பேக்கேஜிங் தொடர்பான படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு ஏவரி டெனிசன், ரிலையன்ஸ், ஐ.டி.சி., நெஸ்லே, புராக்டர் அண்டு கேம்பிள் போன்ற நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஏற்றுமதி, அச்சு தொடர்பான அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us