கம்பள தொழில்நுட்பம் கற்க ஐ.ஐ.சி.டி., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (79)
கம்பள தொழில்நுட்பம் கற்க ஐ.ஐ.சி.டி., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (79)
அக் 04, 2009 12:00 AM
அக் 04, 2009 12:00 AM
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி ( ஐ.ஐ.சி.டி.,) உ.பி.,யின் படோலி நகரில் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கார்பெட் தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்த பாடங்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் கல்வி நிறுவனம் இது ஒன்றே.
2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் மத்திய ஜவுளித்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. லக்னோவில் உள்ள உ.பி., தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் மான் செஸ்டர் நகரில் உள்ள டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட்டின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் இது.
மனித வள மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப உதவி, வடிவமைப்புகளை உருவாக்குவது தொடர்பான பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைதியான சூழலில் இந்த கல்விநிறுவனம் அமைந்துள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியான ஹாஸ்டல்கள் உள்ளன.
இங்கு நான்காண்டு படிப்பாக பி.டெக்., கார்ப்பெட் அண்டு டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. குறுகிய கால டிப்ளமோ படிப்பாக
- பேசிக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
- உல் ஸ்கவுரிங் டெக்னாலஜி
- டெக்ஸ்டைல் டையிங் அண்டு பினிஷிங்
- கார்ப்பெட் யார்ன் மேனுபக்சர்
- கார்ப்பெட் டெக்னாலஜி
- அபாரல் யார்ன் மேனுபக்சர்
- கார்பெட் அண்டு டெக்ஸ்டைல் டிசைனிங்
சர்டிபிகேட் படிப்புகளாக
- இன்ட்ரோடக்ஷன் டு உல் அண்டு உல் இன்டஸ்டிரி
- மேனுபக்சர்ட் டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ்
- உல் அண்டு உல் ஸ்கவுரிங் புராசஸ்
- உல் கேரக்டரிஸ்டிக்ஸ் மெஷர்மென்ட்ஸ்
- டெக்ஸ்டைல் பைபர் பெண்டிங்
- டெக்ஸ்டைல் டையிங் அண்டு பினிஷிங்
- டெக்ஸ்டைல் அண்டு டைஸ்டப் கெமிஸ்ட்ரி
- டையிங் மெஷினரி அண்டு மெக்கானிசம்
- டெக்ஸ்டைல் பிரின்டிங்
- கார்ப்பெட் மேனுபக்சர்
- கார்ப்பெட் பினிஷிங்
- வோவன் பேப்ரிக்ஸ்
- நேச்சுரல் டையிங்
- நேச்சுரல் டெக்ஸ்டைல் பைபர்ஸ்
- ஸ்பன் யார்ன்
- உல் ஸ்கவுரிங் டெக்னாலஜி
- உல் மார்க்கெட் சிஸ்டம்
- உல் யார்ன் மேனுபக்சரிங்
- டையிங் ஆப் உல் கார்பெட் யார்ன்ஸ்
- டெக்ஸ்டைல் டை செலக்ஷன் அண்டு யூஸ்
- டெக்ஸ்டைல் கலர்
- டை ஹவுஸ் ஆபரேஷன்
- கார்ப்பெட் மெயின்டனென்ஸ்
- கார்ப்பெட் பெர்பார்மென்ஸ்
ஆகிய படிப்புக்கள் வழங்கப்படுகின்றன.
டிப்ளமோ படிப்புகளுக்கு கட்டணமாக 36 ஆயிரம் ரூபாயும், சர்டிபிகேட் படிப்புகளுக்கு கட்டணமாக 6 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பி.டெக்., படிப்புக்கு 55 ஆயிரம் ரூபாய் கட்டணம்.
