தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜியாலஜி - மண்ணியல் (துறை அறிமுகம்)

ஜியாலஜி - மண்ணியல் (துறை அறிமுகம்)

ஜியாலஜி - மண்ணியல் (துறை அறிமுகம்)


அக் 04, 2009 12:00 AM

அக் 04, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 04, 2009 12:00 AM அக் 04, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பூமியின் தோற்றம், சுற்றுப்புறம், தோன்றிய வரலாறு, புவியில் அடங்கியுள்ள தாதுப் பொருட்கள் போன்றவற்றைப் படிக்கும் அறிவியல் பிரிவை ஜியாலஜி எனக் கூறுகின்றனர்.

இவற்றைப் படிப்பவரை ஜியாலஜிஸ்ட் என்று கூறுகின்றனர். உலகின் தாதுவளங்கள் மற்றும் இயற்கை வளங்களை அறிவதில் ஜியாலஜிஸ்டுகள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

ஜியாலஜியில் ஸ்ட்ரக்சுரல் ஜியாலஜி, மினராலஜி, பிளான்ட்டாலஜி, ஜியோமார்பாலஜி, ஜியாலஜிக்கல் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. ரயில்வே தண்டவாளங்களை இடுதல், சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், கட்டிடங்கள் கட்டுதல் போன்றவற்றுக்குத் தகுந்த மண்ணின் தன்மை குறித்து இவர்களே முக்கியத் தகவல்களைத் தருகின்றனர். அதேபோல கடலுக்கு அடியிலுள்ள வளங்களையும் எரிவாயு வளத்தையும் அறிவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். மண்ணின் தன்மையை அறிய உதவும் ஜியோபிசிக்கல் மற்றும் ஜியோ கெமிக்கல் சோதனைகளைச் செய்து அவற்றை உலகுக்குத் தெரிவிப்பவர்களும் இவர்கள் தான்.

பணித் தன்மை
இயற்கைப் பேரழிவினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கூறுவது, கடலுக்கு அடியிலுள்ள வளங்களை இனம் காணுவது போன்றவையே இவர்களுடைய முக்கியப் பணியாகும். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பின்புலமாக உள்ள ரயில்வே வழித்தடங்கள், சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றைக் கட்டுவதில் ஜியாலஜிஸ்டுகளின் பணி முக்கியப் பங்காற்றுகிறது.

பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் ஜியாலஜிஸ்டுகளின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜியாலஜி படிப்பை முடித்த ஒருவர் ஜியாலஜிஸ்ட், மெட்டீரியாலஜிஸ்ட், ஜியோகிராபர், ஓஷனோகிராபர் போன்ற ஏதாவது ஒரு நிலையில் பணியாற்ற முடியும். ஜியாலஜி முடித்தபின் ஒருவர் ஈடுபடும் துறைக்கேற்ப பெட்ரோலஜி, பாலியன்டாலஜி, ஜியோபிசிக்ஸ், மைனிங், என்விரான்மென்டல் எஜூகேஷன், ரிசர்ச் அண்ட் பீல்ட் ஸ்டடி போன்ற மேற்படிப்புகளை மேற் கொண்டும் அவற்றில் ஈடுபடலாம்.

படிப்புகள்
இத்துறைப் படிப்புகளை பட்டப்படிப்பாகவோ பட்ட மேற்படிப்பாகவோ மேற்கொள்ளலாம். பட்டப்படிப்பு படிக்க பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் படித்திருப்பது அவசியம். பட்டமேற்படிப்பை மேற்கொள்ள துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப் படிப்பு பல கல்வி நிறுவனங்களால் தரப்படவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இது தரப்படுகிறது. துறையில் எம்.எஸ்சி., அல்லது பிஎச்.டி., படித்தவர்கள் எம்.டெக்., அல்லது பி.எச்டி., எனப்படும் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ள முடியும். தனிநபரின் இருப்பிடம் மற்றும் தேவைக்கேற்ப பின்வரும் ஜியாலஜி படிப்புகளிலிருந்து ஏதாவது ஒரு படிப்பை அவர்களுக்கு விருப்பமான பல்கலைக்கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளலாம்.

B.Sc., Honours with Geology
M.A., M.Sc., Geology
M.Sc., Applied Geology
M.Sc., (Tech) in Applied Geology
M.Tech., (Geology)
M.Phil., (Geology)
Ph.D.,

பொதுவாகவே ஜியாலஜிஸ்ட்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பணியாற்றும் கட்டாயத் தன்மையைப் பெற்றிருப்பதை அறிகிறோம். இதனால் அவர்கள் வீட்டை விட்டு பல நாட்கள் பிரிந்திருக்கும் நிலையைக் காணலாம். எனவே நல்ல உடல் நிலையும் மனச் சோர்வை விரட்டத் தெரிந்திருப்பதும் இத் துறைப் பணிகளின் அடிப்படைத் தேவைகளாக உள்ளது.

வாய்ப்புகள்
ஜியாலஜிஸ்ட்களாக பணியாற்றுவது சவாலான ஒன்று தான். ஆனால் தற்போதைய சூழலில் சிறப்பான வருமானம் தரக் கூடிய துறையாக இது விளங்குகிறது. இந்தியாவிலுள்ள அரசுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஜியோகிராபர், மெட்டீரியாலஜிஸ்ட் மற்றும் ஓஷனோகிராபர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

யு.பி.எஸ்.சி., நடத்தும் ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா சேவைத் தேர்வு எழுதி சிறப்பான மத்திய அரசு அதிகாரி நிலைப் பணிகளில் சேரலாம். தாதுவளங்களை ஆராய்ந்து வரும் நிறுவனங்களான கோல் இந்தியா, மினரல் எக்ஸ்புளோரேஷன் அதாரிட்டி, ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் சிங்க் போன்ற நிறுவனங்களும் அதிக அளவில் ஜியாலஜிஸ்டுகளை பணியில் அமர்த்துகின்றன.

இந்தியாவின் பாதுகாப்புப் பணிகளிலுள்ள டிபென்ஸ் மற்றும் பாராமிலிடரி அமைப்புகளும் ஜியாலஜிஸ்டுகளை பெரிதும் நம்புகின்றன. மொத்தத்தில் ஜியாலஜி படித்தவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளிலுமான சிறந்த பணி வாய்ப்புகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதே உண்மையாகும்.

சம்பளம்
பிற சிறந்த துறைகளைப் போன்றே திறமையும் தகுதியும் இத்துறை சம்பளத்தை நிர்ணயிக்கின்றன. மத்திய அரசு வாய்ப்புகளைத் தவிர தனியார் துறையிலும் இன்று இவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ரிலையன்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி., போன்ற நிறுவனங்களில் இத் துறை நிபுணர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us