தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புதுச்சேரி ஜிப்மர் - ஓர் அறிமுகம்

புதுச்சேரி ஜிப்மர் - ஓர் அறிமுகம்

புதுச்சேரி ஜிப்மர் - ஓர் அறிமுகம்


நவ 09, 2009 12:00 AM

நவ 09, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 09, 2009 12:00 AM நவ 09, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவக் கல்வியில் தேசிய அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக புதுச்சேரி ஜிப்மர் விளங்கி வருகிறது.

ஜிப்மர் கடந்த 1823ம் ஆண்டு ’ஈகோல் டி மெடிசன்ஸ் டி பாண்டிச்சேரி’ என்ற பெயரில் பிரெஞ்சு அரசால் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. 1956ம் ஆண்டு இந்திய அரசால் எடுக்கப்பட்டு பின் தரம் உயர்த்தப் பட்டு 1964ம் ஆண்டு முதல் ஜவகர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட்கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (ஜிப்மர்) என்ற பெயரில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நேரடி கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இது சிறந்த மருத்துவ சேவையுடன் பல்வேறு விதமான மருத்துவப் படிப்புகளையும் நடத்தி வருகிறது.

 ஜிப்மர் மருத்துவமனை: 95 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து விதமான நோய் மற்றும் மன நோய்களுக்கும் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் நவீன வசதிகளுடன் நோய் அறிகுறிக்கான சோதனையை இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக புதுச்சேரியிலிருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். உடலை முழுமையாக சோதனை செய்ய உதவும் சிடி ஸ்கேன் வசதி இங்கு உள்ளது. ரத்த வங்கி உரிமையும் பெற்றுள்ளது. 860 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் 497 டாக்டர்களும், 578 நர்சுகளும் பணிபுரிகின்றனர்.

கல்விப் பணி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகரிக்கப் பட்டுள்ள இந்த கல்வி நிறுவனத்தில் சிறந்த அனுபமுள்ள 154 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜிப்மர் ஒவ்வொரு வருடமும் பல வகையான கலந்தாய்வு கூட்டங்கள், தொழிற்பயிற்சிகள் , கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது. மேலும் நவீன மருத்துவம் மற்றும் சுகாதாரம் பற்றிய ஆராய்ச்சிகளையும், மெடிக்கல் மற்றும் பாரமெடிக்கல் பட்டபடிப்புகளையும் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த மருத்துவமனையிலேயே ஏராளமான வேலைவாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் இந்திய அளவில் ஜிப்மர் ஒவ்வொரு வருடமும் ஜூன் இரண்டாவது ஞாயிற்று கிழமையில் நடத்தும் நுழைவுத் தேர்வில் மெரிட் அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வுக்கான தகுதிகள்: ஜூலை முதல் தேதியில் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும் . பிளஸ் 2 படிப்பில் ஆங்கிலத்தில் 50
சதவீதமும், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் 50 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகள்
இளநிலை பட்டப்படிப்பு
* எம்.பி.பி.எஸ்.,
* பி.எஸ்.சி.,( மெடிக்கல் லெபாரட்டிரி டெக்னாலஜி)
* பி.எம்.ஆர்.எஸ்.சி., ( பேச்சிலர் ஆப் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்)

முதுநிலை பட்டப்படிப்பு
* எம்.டி., , எம்.எஸ் மற்றும் டிப்ளமோ
* எம்.எஸ்.சி.,(மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி)
* பி.எச்டி (முழு நேரம்)
சிறந்த தனிச்சிறப்பு படிப்புகள்
* எம்.சிஎச்., ( கார்டியோ தோரசிக் சர்ஜரி)
* எம்.சிஎச்., (யுரோலாஜி)

மற்ற படிப்புகள்
பிரெஞ்சு சான்றிதழ் படிப்புகள், உயர்நிலை பிரெஞ்சு டிப்ளமோ, எம். ஆர். ஓ மற்றும் எம்.ஆர்.டி

முகவரி:
ஜிப்மர், புதுச்சேரி - 605 006,

மேலும் விபரங்களுக்கு
www.jipmer.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us