தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆக்குபேஷனல் தெரபி - துறை அறிமுகம்

ஆக்குபேஷனல் தெரபி - துறை அறிமுகம்

ஆக்குபேஷனல் தெரபி - துறை அறிமுகம்


நவ 09, 2009 12:00 AM

நவ 09, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 09, 2009 12:00 AM நவ 09, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக்குபேஷனல் தெரபி எனும் துணை மருத்துவ துறை ஒரு சிறப்பான வேலைவாய்ப்பை தரும் படிப்பாகும். இருப்பினும் சம்பளம் என்பது பெரிதாக எதிர்பார்க்க முடியாது. அரசு மருத்துவமனை மற்றும் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் வேலை பெறுவது சிறப்பு.

முதுகலைப் படிப்பை ஆக்குபேஷன் தெரபி அல்லது ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகிய துறைகளில் தொடங்கலாம். எம்.ஓ.டி., (மாஸ்டர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி) படிப்பு சிறந்தது.

இப்படிப்பை முடித்து போதிய அனுபவம் பெற்று விட்டால் நீங்களே ஒரு கிளினிக் தொடங்கிவிட முடியும் .ஆனால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை ஒளிமயமாக்க இருக்க விரும்பினால் ஹெல்த் அல்லது ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிப்பு அவசியமானதாகும். இந்த படிப்பு முடித்த அனுபவம் வாய்ந்தவர்களை அப்பல்லோ,மேக்ஸ்,போர்டிஸ், டாடா உள்ளிட்ட கம்பெனிகள் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன.

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சர்வீசஸ், மும்பை மற்றும் அப்பலோ இன்ஸ்டிடியூட் ஆப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன், ஐதராபாத் ஆகிய நிறுவனங்கள் முதுகலை ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கு இளநிலை பட்டபடிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. மும்பை, சிம்பயாசிஸ் சென்டர் ஆப் ஹெல்த் கேர், புனே மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மேனேஜ்மென்ட் ஆராய்ச்சி, ஜெய்ப்பூர் ஆகிய கல்வி நிறுவனங்கள் ஹெல்த் கேர்/ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் முதுகலை டிப்ளமோ படிப்புகளை நடத்தி வருகிறது. இதற்கு எதாவது ஒரு துறையில் இளநிலை பட்டபடிப்பு படித்திருந்தால் போதுமானது.

சில பல்கலைக்கழகங்கள் ஹாஸ்பிடல் மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட் படிப்புகளை நடத்துகின்றன.
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
* சிவாஜி பல்கலைக்கழகம், வித்யாநகர் கோல்காபூர்
* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை
* தேவி அகில்யா விஷ்வவித்யாலயா, இந்தூர். சில பல்கலைக்கழகங்கள் ஹெல்த் மற்றும் குடும்ப நல மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளுக்கு தொலைதூரக் கல்வியையும் அளிக்கின்றன.
*நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மற்றும் குடும்ப நலம், புதுடில்லி
* இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் நீங்கள் எம்.பி.ஏ., ஹெல்த்கேர் படித்தால் உங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us