தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/உங்கள் நுண்ணறிவை வளருங்கள்...

உங்கள் நுண்ணறிவை வளருங்கள்...

உங்கள் நுண்ணறிவை வளருங்கள்...


பிப் 01, 2010 12:00 AM

பிப் 01, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 01, 2010 12:00 AM பிப் 01, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாம் ஒரு துறையில் வெற்றி பெற வேண்டுமானால், அதைப் பற்றி போதுமான அளவு கற்றால் மட்டும் போதாது.

நம்முடைய நுண்ணறிவை பயன்படுத்தி பல புதுமைகளை சம்பந்தபட்ட துறையில் நிகழ்த்த வேண்டும். இதுவே வெற்றியின் தாரக மந்திரமாகும். ஒரு செயலை செய்ய துவங்கும் முன் அதில் உள்ள நிறை, குறைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வை எவ்வித பயம், தயக்கம் இல்லாமலும், மற்றவர்களின் பார்வையிலிருந்து தனித்துவமாக சிந்திப்பதும் நுண்ணறிவாகும். இவ்வுலகில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்ளும் விஷயம் என்னவென்றால், நுண்ணறிவு தான் முன்னேற்றத்தின் முதல் வழி. திறமை, செயல்திறன், தகுதி ஆகியவை கூட இரண்டாவதாக தான் உள்ளது என்பதாகும்.

ஏன் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள இயலவில்லை? நாம் பிறக்கும் போது ஒரு விதமான அறிவுத்திறனுடன் தான் பிறக்கிறோம். ஆனால் அதை ஏன் நம்மால் கையாள இயலவில்லை? போன்ற கேள்விகள் நம் மனதில் எப்போதும் தோன்றும். இதற்கு பதில், எப்போதும் நேர்மறையான (பாசிடிவ்) எண்ணங்களை பெற வேண்டும். இதன் மூலமாக தான் ஒவ்வொரு செயலையும் துல்லியமாகவும், சரியாகவும், குழப்பம் இல்லாமலும் ஆராய முடியும். எனவே நேர்மறை எண்ணங்களுடன் சிந்தியுங்கள். நமக்கு வரும் சவால்களை மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

ஆபத்து காலத்தில் உதவி செய்பவர்களை புரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், அவர்களின் மீது <உரிய நம்பிக்கை கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களுடன் மற்றவர்களை நாம் அனுகினால், நம்முடைய உள்ளுணர்வு என்று சொல்லக்கூடிய ‘சப் கான்சியஸ்’ எண்ணமானது நம்முடன் பழகுபவர்களில் நேர்த்தியானவர்களை கண்டுபிடிக்க உதவும். நேர்மறை எண்ணத்துடன் ஒரு செயலை துவங்கும் போது, நமக்குள் இருக்கும் திறமையானது தானாகவே வெளிவந்து அச்செயலை சிறப்பாக செய்து முடிக்கும்.

‘கான்செப்ட் ஆப் லேட்டரல் திங்கிங்’ என்ற புத்தகத்தை எழுதிய எட்டவர்டு டீ போனோ என்பவர் கூறுகையில், ‘உங்களுடைய அறிவுத்திறனானது இன்ஜினின் ஆற்றல் போன்றது. இன்ஜினின் ஆற்றலை அதிகரித்தால் நம்முடைய இலக்கை விரைவில் சென்றடையலாம். ஆனால் வாகனத்தை துல்லியமாகவும் செலுத்த தெரிந்தவரால் மட்டுமே வேகமாகவும், பாதுகாப் பாகவும் செல்ல முடியும். இல்லையேல் விபத்து நேரிடும். அது போல் பல வகையான திறமைகள், செயல்திறன் என அனைத்தும் பெற்றிருந்தாலு<ம் நுண்ணறிவு தான் உங்களை மென்மேலும் உயர்த்தும். ’ என்று கூறியுள்ளார்.

உணர்ச்சி வேகத்துடன் கூடிய நுண்ணறிவை பெற்றிருப்பவர்கள் இவ்வுலகில் எதையும் சாதிப்பார்கள் என டேனியல் கோல்டுமேன் எனும் பேரறிஞர் தெரிவித்துள்ளார்.  மேலும் அத்தகைய நுண்ணறிவை பெற்றிருப்பவர்கள் தங்கள் திறமையின் மேல் முழுமையான நம்பிக்கை பெற்றிருப்பார்கள் என்றும் அவர் கூறினார். எனவே நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து வாழ்வில் வெற்றி பெற போதுமான நுண்ணறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us