தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காவல் துறை அழைக்கிறது - சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

காவல் துறை அழைக்கிறது - சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,

காவல் துறை அழைக்கிறது - சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,


பிப் 01, 2010 12:00 AM

பிப் 01, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 01, 2010 12:00 AM பிப் 01, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சில அறிவுரைகள்
1. பாடங்களை படிப்பதை கடினமாக நினைக்காமல் விரும்பி படியுங்கள்.  சந்தோஷமாக செய்தால் எதுவுமே கடினம் அல்ல.

2. எந்த பாடத்தை படித்தாலும் மனப்பாடம் செய்வதை விட, புரிந்து படித்தல் என்பது நலமாக இருக்கும்.  வேலைக்கு விண்ணப்பித்த நாளில் இருந்தே படிக்க தொடங்கிவிடவேண்டும்.

3. கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு படிக்காமல், தினமும் படிக்க வேண்டும். 

4. படித்தவற்றை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. காவலர் வேலைக்கு விண்ணப்பித்த தேதியிலிருந்தே நம் உடலை தயார் செய்யும் முயற்சியில் இறங்கவேண்டும்.  உடல் பருமன் உள்ளவர்கள் முதலில் உடல் எடையை குறைக்கவேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.  உடற்பயிற்சியில் ஒரு முக்கியமான அங்கம் நடப்பது. எடுத்த உடனேயே ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது தவறு. 

முதல் ஒரு வார காலம் நடக்க வேண்டும்.  2வது வாரம் மெதுவாக ஓடத் துவங்கவேண்டும்.  3வது வாரம் ஓடி பழகவேண்டும்.  முதல் நாள் 5 நிமிடம், 2வது நாள் 10 நிமிடம், 3வது நாள் 15 நிமிடம் என ஓடும் நேரத்தையும், வேகத்தையும், தூரத்தையும் கூட்டிக்கொண்டே செல்லவேண்டும். ஓட்டப்பயிற்சியின்போது மூட்டு வலி, முதுகு வலி ஏற்பட்டால் சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பயிற்சியை தொடரவேண்டும்.

6. பயிற்சி எடுக்கும்போது கடிகாரத்தின் உதவியுடன் 1500 மீட்டர் தூரத்தை எத்தனை நிமிடத்தில் நம்மால் கடக்க முடிந்தது என்பதை குறித்துக் கொள்ளவேண்டும். ஓடுவதற்குமுன் தண்ணீர் கொஞ்சமாக குடிக்கலாம்.  ஓடி முடித்த பின் தண்ணீர் குடிக்கக்கூடாது.  காலை 5 மணி முதல் 8 மணிவரையிலும், மாலை 5மணி முதல் 7 மணிவரை ஓட்டப்பயிற்சி செய்ய ஏதுவான நேரம்.  ஒரு நாள் அதிக பயிற்சி செய்வது பல நாள் பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லதல்ல.  இது எல்லா உடற்பயிற்சிக்கும் பொருந்தும். 

7. ஆண்களுக்கு கயிறு ஏறும் போட்டி கட்டாயமான போட்டி என்பதால் இதில் கலந்துக்கொள்ள தனிப்பயிற்சி எடுக்கவேண்டும்.  தங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு மரத்தில் கயிறு கட்டி ஏறி இறங்கி பழகவேண்டும். அதாவது நீளமாக தொங்கும் கயிற்றில் கால்கள் படாமல் கைகளின் உதவிகொண்டு ஏறி பழகவேண்டும்.  இந்த போட்டி தவிர நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும்.  இந்த இரண்டு போட்டியில் எது தங்களுக்கு சரியாக வருமோ அதை தேர்வு செய்து, விண்ணப்பித்த நாளில் இருந்து அந்த பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

8. ஆண்களை போலவே பெண்களும் தாங்கள் விண்ணப்பித்த நாள் முதல் தங்கள் அருகில் உள்ள விளையாட்டு திடல் சென்று ஓட்டம், நீளம் தாண்டுதல், பந்து வீசுதல் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். கிரிக்கெட் பந்து சுலபமாக கிடைக்கும் என்பதால் பந்து வீசும் பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. சில பெண்கள் விளையாட்டுத்திடல் சென்று பயிற்சியில் ஈடுபட கூச்சப்பட்டுக்கொண்டு பயிற்சியில் ஈடுபடமாட்டார்கள்.  இதனால் அவர்களால் வெற்றி பெறமுடியாமல் போய்விடுகிறது.

9. காவலர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியான காலகட்டத்திற்கும், எழுத்து மற்றும் உடல் திறன் அறியும் தேர்வு நடைபெறும் காலகட்டத்திற்கும் இடையில் குறைந்தபட்சம் 60 முதல் 90 நாட்கள் வரை இடைவெளியிருக்கும்.  இந்த காலகட்டத்தில் தேவையான பயிற்சிகளை பெறுபவர்கள் சுலபமாக வெற்றி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us