தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களே!

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களே!

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களே!


பிப் 08, 2010 12:00 AM

பிப் 08, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 08, 2010 12:00 AM பிப் 08, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை பற்றி கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது:

* புதிதாக எந்த பாடத்தையும் இனி படிக்கக்கூடாது. இதுவரை படித்த பாடங்களை திரும்ப படிக்கத்தான் இனி நேரம் இருக்கும்.

* திருப்புதல் தேர்வில், 20 மதிப்பெண்கள் குறைந்திருந்தால், எதனால் குறைந்திருக்கிறது என்பதை மிகக்கவனமுடன் ஆராய வேண்டும். இதற்காக ஆசிரியர்களிடம் கேட்டு தயார் செய்து கொள்ள வேண்டும்.

* பிப்ரவரி - மார்ச்சில் பனியிலிருந்து வெப்பம் அதிகரிக்கும். மாறும் இந்த தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தட்டம்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், காலையில் 15-20 நிமிடம் மாணவர்கள் வெளியில் நடந்து சென்று வருவது நல்லது.

* மாணவர்கள் பலர் தேர்வின் போது, வரைபடங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர். அதற்கு காரணம் அவற்றுக்காக உரிய நேரம் ஒதுக்காததுதான்.

* அரசு வெளியிட்டுள்ள ஆசிரியர் பெற்றோர் கழக புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பார்ப்பது நல்லது. இது மாணவர்கள் தங்களுக்குள் விடையளித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் மாணவர்கள் முக்கியமான கணக்கீடுகள், சூத்திரங்கள், வரைபடங்களை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். இதை மாலை நேரத்திலேயே செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன் செய்து பார்க்கக்கூடாது. கடினமான இப்பகுதிகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது அந்நேரமல்ல.

* மாணவர்களுக்குள் நீ எவ்வளவு படித்திருக்கிறாய். நீ இதைப் படித்துவிட்டாயா... நீ அதைப் படித்துவிட்டாயா என்று ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொள்ளக்கூடாது. இது தாழ்வு மனப்பான்மை உருவாக காரணமாக அமைந்துவிடும்.

* மூன்று முழு மாதிரித்தேர்வுகளை மாணவர் எழுதிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தேர்விலும், நடந்த தவறுகள் மீண்டும் நடக்காவண்ணம் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு செய்கிறவர்களுக்கு 90 - 100 சதவீத மதிப்பெண் வாங்கும் வாய்ப்பு உண்டு.

* ‘டிவி’யை பரணில் வைத்து விடுவது நல்லது. வீட்டில் யார் ‘டிவி’ பார்த்தாலும் அது படிக்கும் மாணவருக்கு இடையூறாக இருக்கும்.

* விருந்தினர்கள், குழந்தைகள் இச்சமயத்தில் வீட்டுக்கு அனுமதிக்கக்கூடாது.

* விசேஷம், நிகழ்ச்சிகள் என்று வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* பெற்றோர்கள் படிக்கும் மாணவரிடம் மிகவும் சாதகமான மனநிலையில் பேச வேண்டும். நெகடிவாக பேசிவிடக்கூடாது. பிள்ளைகள் படிப்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஜெயப்பிரகாஷ்காந்தி தெரிவித்தார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us