தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களே...

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களே...

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களே...


பிப் 15, 2010 12:00 AM

பிப் 15, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 15, 2010 12:00 AM பிப் 15, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை விரைவில் எழுதவுள்ள நமது மாணவர்களில் சிலர் சுமாராகப் படிப்பவராக இருப்பவருக்கு சில ஆலோசனைகள்:

நாம் படிப்பில் பின்தங்கியுள்ளோம் என்றெல்லாம் எண்ணும் காலம் இல்லை இது. ஒருவர் பெறும் மதிப்பெண் என்பது மட்டுமே அவரது ஐ.கியூவையோ திறனையோ காட்டுவதும் இல்லை. நமது திறமையை முழுமையாகப் பயன்படுத்த நமக்குத் தெரிந்தால் மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய கலை அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மிகவும் சுமாராக மதிப்பெண் பெறுபவருக்கு சில உத்திகள்...

* நீங்கள் சுமாராக மதிப்பெண் பெற என்ன காரணம் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்களால் அப்படி யோசிக்க முடியாத போது உங்களது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் இதில் உங்களுக்கு உதவக் கூடும்.

* உங்களது பலம் என்ன, பலவீனங்கள் என்ன என்பதைப் பட்டியலிடுங்கள். பலவீனங்கள் ஒவ்வொன்றாக களையப்பட முனைப்புடன் செயல்படுங்கள்

* உங்களது இலக்கை தெளிவாக நிர்ணயித்து அதற்கேற்ப பயணியுங்கள் அளவிடக்கூடிய, அடையக்கூடிய, சாத்தியமான மற்றும் கால நேர வரையறைக்குட்பட்ட இலக்குகளாக அவற்றை நிர்ணயிப்பது முக்கியம்.

* படிப்பதை எப்போதும் தள்ளிப் போடாதீர்கள். இது உங்களது எதிர்காலத்தை வீணாக்கும் பழக்கமாக அமைந்து விடும்.

* நேர மேலாண்மை மிக மிக முக்கியமானது

* படிப்பது தொடர்பாக நவீன உத்திகளைக் கையாளுங்கள்.

* உங்களது கவனத்தையும், படிப்பதை மனதில் கொள்ளும் திறன்களையும் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். போதிய பயிற்சியின் மூலமாக மட்டுமே இதை அடைய முடியும்.

* நீங்கள் சாதனைகளில் முந்த விரும்பும் ரோல் மாடல் ஒருவரை கண்டு பிடியுங்கள். அவரை அனைத்து அம்சங்களிலும் முந்திட விரும்புங்கள்.
தேர்வுகள் என்பவை உங்களை பரிசோதிப்பவை என்று நினைக்காதீர்கள். நீங்கள் படித்தவற்றை அறிந்து கொள்ள உதவும் வாய்ப்பாக அவற்றை நினையுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us