தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே வாய்ப்பு

தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே வாய்ப்பு

தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே வாய்ப்பு


பிப் 15, 2010 12:00 AM

பிப் 15, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 15, 2010 12:00 AM பிப் 15, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்.சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர், ஹர்கோபிந்த் கொரானா வரிசையில் அறிவியல் துறையில், நோபல் பரிசைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

நோபல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் பேசியதன் தொகுப்பு:

நான் என்னுடைய முனைவர் ஆராய்ச்சிப் பட்டத்தை (பிஎச்.டி.,) கொள்கை அடிப்படையிலான, இயற்பியலில் மேற்கொண்டேன். இதற்கு ஒரு கருத்தியல் அளவிலான சிந்தனை தேவைப்பட்டது. ஆனால் ஆய்வின் போது, இதையே தொடர்ந்தால் என்ன செய்வது என்று சிந்தித்தேன். அச்சமயத்தில், சயின்டிபிக் அமெரிக்கன் எனும் இதழை படிக்க நேர்ந்தது. அதில் உயிரியல் தொடர்பாக வெளியான கட்டுரைகளால் கவர்ந்திழுக்கப்பட்டேன்.

ஆகவே, உயிரியலில் இரண்டாவதாக பிஎச்.டி., பட்டம் பெறுவது என்று முடிவு செய்தேன். அமெரிக்க கல்வித் துறையில் உள்ள பலமே, இவ்வாறு துறை மாறி ஆய்வு செய்பவர்களையும் ஏற்றுக் கொள்வதுதான். ஆனால் இந்த வசதி பல்வேறு நாடுகளில் இல்லை. ஒரு வேலையை நீங்கள் செய்ய முடியும் என்று கருதினால், அமெரிக்கர்கள் அதை மட்டும்தான் பார்ப்பார்கள். திறமைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள். உங்கள் குடும்பப் பின்னணி என்ன என்பதை பார்க்க மாட்டார்கள்.

அவர்கள் என்னுடைய திறமை அடிப்படையில் வாய்ப்புகளை வழங்கினார்கள். அமெரிக்கா அறிவியலில் உலகின் தலைமையகமாக இருக்கிறது. ஆராய்ச்சிக்காக பணத்தை தண்ணீராக இறைக்கிறார்கள். ஆகவே ஆய்வு செய்வது அங்கு எளிதாக இருக்கிறது. இந்தியாவில் பட்டம் பெற்றுவிட்டு, அமெரிக்காவின் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்கு அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள்.

அறிவியல் என்பது சர்வதேச முயற்சி என்றே நான் நினைக்கிறேன். ஒரு நாட்டில் நிகழும் கண்டுபிடிப்பு மற்ற நாடுகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது முக்கியம் அல்ல. நான் என்னுடைய அடிப்படைக் கல்வியை இந்தியாவில் பெற்றேன். என்னுடைய சிறப்பு கல்வியை அமெரிக்காவில் கற்றேன். அங்குதான் ரிபோசோம் பற்றி ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டேன். ரிபோசோமின் உயர்தர தெளிவு கட்டமைப்புப் பற்றி அறியும் வசதி பிரிட்டனில்தான் கிடைத்தது. நான் நோபல் பரிசு பெற்றதில் இந்த மூன்று நாடுகளுக்குமே பங்கு இருக்கிறது.

இந்தியாவில் ஆராய்ச்சி இன்னமும் வளர வேண்டிய நிலையில் உள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் தேர்வில் திறமைக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்க வேண்டும். கல்விக்கு மதிப்பு அளிக்க வேண்டும். என்னுடைய ஆசிரியர்கள் பெரிய ஆராய்ச்சி விஞ்ஞானிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, ஆனால் அவர்கள் மிகச்சிறந்த ஆசிரியர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவில் தேசிய திறனாய்வு தேர்வு எங்களுடைய காலத்தில் மிகப்பெரிய விஷயமாக இருந்தது. தற்போது மருத்துவத்துக்கும் இன்ஜினியரிங்குக்கும் இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது. தேசிய திறனறிவுத் தேர்வு பற்றிய கவலை இல்லாமல் இப்போது மருத்துவம் இன்ஜினியரிங் படிப்போர் அதிகமாக உள்ளனர்.

நான் எப்போதும் கூறுவது, பிரச்னைகளுக்கான தீர்வுகளை காண்பதில்தான் ஆர்வம் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை உதவும் கரங்களைப் போல் மட்டும் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் சிந்திக்க தூண்ட வேண்டும். அதற்காக நாம் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us