பிப் 16, 2010 12:00 AM
பிப் 16, 2010 12:00 AM
முதுநிலை பட்டப்படிப்பில் புதியதாக ஐந்து பாடப்பிரிவுகளை துவக்கியுள்ளது புதுச்சேரி பல்கலைக்கழகம்.
எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜி
மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவர்களுக்கு அத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. பயோ கெமிஸ்ட்ரி, நுண்ணுயிரியல், வைரசால் உருவாகும் தொற்றுநோய்கள் பற்றிய ஆய்வு, பூஞ்சைகள் பற்றிய ஆய்வு, மரபியல், மருத்துவ மைக்ரோ பயாலஜி, உணவு மைக்ரோ பயாலஜி, மரபியல் இன்ஜினியரிங் போன்ற பாடங்கள் இப்படிப்பில் அடங்கியுள்ளன.
தகுதிகள்: மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி போன்ற எதாவது ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
எம்.டெக்., எலக்ட்ரானிக்ஸ்
சிஸ்டம் டிசைன், டிஜிட்டல் மற்றும் ஆப்டிகல் கம்யூனிகேசன்,மைக்ரோவேவ், பவர் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடங்கள் இப்படிப்பில் அடங்கியுள்ளன.
தகுதிகள்: பி.இ., பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி.,யில் இயற்பியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எம்.டெக்., நானோ சயின்ஸ் மற்றும் நானோ டெக்னாலஜி
வரும் ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெரும் துறையாக நானோ டெக்னாலஜி கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நானோ டெக்னாலஜி இயற்பியல், மருத்துவம், பொறியியல், உயிரியல் போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நானோ டெக்னாலஜி தொடர்பான ஆய்வுகள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
இப்படிப்பில் நானோ மெட்டீரியல், நானோ கட்டமைப்பு, நானோ டிசைன், நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ போட்டோனிக்ஸ் போன்ற பாடங்கள் அடங்கியுள்ளன.
தகுதிகள்: எம்.எஸ்சி.,யில் இயற்பியல், வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் போன்றவற்றில் எதாவது ஒரு பட்டப்படிப்பும், பி.இ., பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் போன்ற எதாவது ஒரு துறையில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
எம்.டெக்., எக்ஸ்புளோ ரேஸன் ஜியோ சயின்ஸ்
இது இயற்கை எரிவாயு, எரிபொருள், கனிமங்கள், பெட்ரோலியம், நிலத்தடி நீர், மண் போன்றவை பற்றி ஆய்வு செய்யும் புவி அறிவியல் படிப்பு. இதில் கனிமங்கள் ஆய்வு, பெட்ரோலியம் ஆய்வு, ரிமோட் சென்சிங், நவீன பகுத்தறியும் முறைகள், புவி இயற்பியல், புள்ளியல் முறைகள் போன்ற பாடங்கள் இப்படிப்பில் அடங்கியுள்ளன.
எம்.டெக்., கிரீன் டெக்னாலஜி
இந்தியாவிலேயே முதன் முறையாக கிரீன் டெக்னாலஜி படிப்பு இப் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட உள்ளது. பசுமை தொழில்நுட்பம் மூலமாக மனித வள மேம்பாட்டிற்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
தகுதிகள்: பி.இ., , பி.டெக் மற்றும் எம்.எஸ்சி., படிப்பில் மெட்டீரியல் சயின்ஸ், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல் போன்ற எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஐந்து படிப்புகளும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகின்றன.
