தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்


மார் 22, 2010 12:00 AM

மார் 22, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 22, 2010 12:00 AM மார் 22, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் இன்றைய கால கட்டத்தில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறை பலராலும் விரும்பப்படும் துறையாக மாறியிருக்கிறது. நிட்டிங், பாலியஸ்டர், காட்டன், சில்க் என இவை அத்தனையையும் உருவாக்கும் தொழில் நுட்பம் தான் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங். இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறிவிடுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்கும் பேஷன் டெக்னாலஜியும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளின் பயன்பாட்டை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறை அதிகம் எடுத்துக் கொள்கிறது.

ஸ்பின்னிங், வீவிங், கார்மென்ட் மேனுபேக்சரிங், டெக்ஸ்டைல் மெசினரி மேனுபேக்சரிங், விற்பனை மற்றும் சேவை, குவாலிடி கன்ட்ரோல் என டெக்ஸ்டைல் டெக்னாலஜி பல பிரிவுகளை கொண்டிருக்கிறது. இத்துறையில் பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் உள்ளன. டில்லி ஐ.ஐ.டி., இதில் ஒன்றரை ஆண்டு பட்ட மேற்படிப்பை தருகிறது. பிளஸ் 2 முடித்த பின் அந்தந்த கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற்று பட்டப்படிப்புகளில் சேர முடியும்.

இன்பர்மேசன் சிஸ்டம்ஸ் டிசைன்ஸ், கெமிகல் பிராசசிங், மெசின் டிசைன், டெக்ஸ்டைல் புராடக்ட் இன்ஜினியரிங் ஆகிய பாடங்கள் டெக்ஸ்டைல்
பிரிவில் காணப்படுகின்றன. மேலும் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர்ஸ், அக்கவுன்டிங் போன்றவற்றையும் படிக்க வேண்டும். பன்னாட்டு ஸ்டைல், பேஷன், மார்க்கெட் டிரெண்ட் ஆகியவை மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன.

பொதுவாக இப்படிப்பு முடிப்பவருக்கு தொடக்க சம்பளம் நிறுவனங்களைப் பொறுத்து மாதம் ரூபாய் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தரப்படுகிறது. நல்ல திறன் பெற்றிருப்பருக்கு தொடக்க சம்பளமே ரூபாய் 20 ஆயிரம் வரை தரப்படுகிறது. காட்டன் யார்ன் தயாரிக்கும் கழகங்கள், ஆய்வகங்கள், குவாலிடி கன்ட்ரோல், அக்ரோ டெக்ஸ்டைல், மெடிக்கல் டெக்ஸ்டைல் போன்றவற்றில் எண்ணற்ற டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் தேவைகள் இருக்கின்றன.

பெரிய ஸ்பின்னிங் மில்களிலும் ஏராளமான தேவைகள் இருக்கின்றன. சுயமாக நிட்வேர் போன்றவற்றை தயாரிப்பதிலும் இப்படிப்பு முடிப்பவர் ஈடுபடலாம். சைசிங் யூனிட், டெக்ஸ்டரிங் யூனிட், பிராசஸ் ஹவுஸ், பினிசிங் யூனிட் போன்றவற்றையும் சுயமாக தொடங்க முடியும்.

சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி
* டெக்னாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ஸ்டைல்ஸ், அரியானா
*  பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோவை
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்
* அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us