மவுலானா ஆசாத் என்.ஐ.டி., - போபால் (சிறந்த கல்வி நிறுவனங்கள்-91)
மவுலானா ஆசாத் என்.ஐ.டி., - போபால் (சிறந்த கல்வி நிறுவனங்கள்-91)
மார் 22, 2010 12:00 AM
மார் 22, 2010 12:00 AM
மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 1960ம் ஆண்டு 120 மாணவர்களுடன் துவக்கப்பட்டது. இது மவுலானா ஆசாத் காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற பெயரில் இந்தியாவின் முதல் 8 என்.ஐ.டி., கல்லூரிகளில் ஒன்றாக துவக்கப்பட்டது. பின் மவுலானா ஆசாத் என்.ஐ.டி., என்று பெயர் மாற்றப்பட்டது. மத்திய அரசும், மத்திய பிரதேச அரசும் இணைந்து இக் கல்லூரியை நவீன வசதி கொண்ட கல்லூரியாக மாற்றியது.
தற்போது இதில் அனுபவமிக்க 200 ஆசிரியர்களின் சீரிய வழிகாட்டுதலில் 4 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிறுவனம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு புதிய படிப்புகளோடு, தொழில் அனுபவத்தையும் வழங்கி வருகிறது. மத்திய பிரதேச தலைநகர் போபாலின் மையப்பகுதியில் 650 ஏக்கர் நிலப்பரப்பில் இதன் வளாகம் அமைந்துள்ளது. 24 மணி நேர பாதுகாப்பு வசதியுடன் எட்டு தங்கும் விடுதிகள் இங்கு உள்ளன.
சிறந்த ஆய்வகங்கள், நூலகம், மருத்துவ மையம், கேன்டீன், விளையாட்டு மைதானம் என பல வசதிகளை கொண்டு இயங்கி வருகிறது.
இளநிலை படிப்புகள் (4 வருடம்)
* பி.இ., (சிவில் இன்ஜினியரிங்)
* பி.இ., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
* பி.இ., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
* பி.இ., (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
* பி.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்)
* பி.இ., (இன்பர்மேசன் டெக்னாலஜி)
* பி.இ., ( ஆர்சிடெக்சர்)
* பி.இ., ( பிளானிங்)
* பி.இ., (பயோ இன்பர்மேட்டிக்ஸ்)
* பி.இ., ( எனர்ஜி)
* பி.இ., (கெமிக்கல்)
* பி.இ., (மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங்)
ஆர்சிடெக்சர் , பிளானிங் ஆகிய இரண்டும் ஐந்து வருட படிப்பாகும்.
முதுநிலை படிப்புகள் ( 2 வருடம்)
* எம்.டெக்., ( டிஜிட்டல் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., ( சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (நானோ டெக்னாலஜி)
* எம்.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்)
* எம்.டெக்., (பயோ இன்பர்மேட்டிக்ஸ்)
* எம்.டெக்., (ஜியோடெக்னிகல் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (எனர்ஜி)
* எம்.டெக்., (டிரான்ஸ்போர்டேசன் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (ரிமோட் சென்சிங்)
* எம்.டெக்., (இன்பர்மேசன் செக்யூரிட்டி)
* எம்.டெக்., (இன்டஸ்ட்ரியல் டிசைன்)
* எம்.எஸ்.சி., ( கணிதம்)
* எம்.பி.ஏ.,
* எம்.சி.ஏ., ( 3 வருடம்)
பிஎச்.டி., படிப்புகள்
ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங்,
எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளும் இங்கு உள்ளன.
தேர்வு முறை
இக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு ‘ஏ.ஐ.இ.இ.இ.,’ மற்றும் ‘கேட்’ ஆகிய நுழைவுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வேலைவாய்ப்பு
மவுலானா ஆசாத் என்.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் தங்களது படிப்பை முடிக்கும் போதே முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெறுகின்றனர்.
மேலும் விபரங்களுக்கு www.manit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
