விரும்பும்போது தேர்வு எழுதலாம்: இக்னோவில் அறிமுகம்
விரும்பும்போது தேர்வு எழுதலாம்: இக்னோவில் அறிமுகம்
மார் 23, 2010 12:00 AM
மார் 23, 2010 12:00 AM
தேர்வுகள் நாம் விரும்பும் நாட்களில், விரும்பும் இடத்தில் நடந்தால் எப்படி இருக்கும். இம் மாதிரி ஒரு புதிய வசதியை தான் இக்னோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி செமஸ்டர் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையம் ஆகியவற்றை நமது விருப்பப்படியே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு தேர்வு கட்டணத்துடன் குறைந்த பட்ச கூடுதல் கட்டணத்தை செலுத்தினால் போதும். இக்னோ இந்த புதிய முறையை கடந்த ஆண்டு இரண்டு சான்றிதழ் படிப்பிற்கு மட்டும் செயல்படுத்தியிருந்தது. தற்போது இந்த முறையை மேலும் சில படிப்புகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
இதனால் மாணவர்கள் செமஸ்டர் தேர்விற்கு 6 மாத காலம் காத்திருக்க அவசியமில்லை. மேலும் ஒவ்வொரு மாணவருக்கு தனித்தனி வினாத்தாள் கொடுக்கப்படுகின்றன. இதனால் முறைகேடுகள் நிகழவும் வாய்ப்பில்லை. தேர்வுக்கு விண்ணப்பித்தல், ஹால் டிக்கெட், விண்ணப்பக் கட்டணம் என அனைத்தையும் ஆன்லைன் முறையிலேயே செய்து கொள்ளலாம். மாணவர்கள் www.winex.ignou.ac.in/WinExamRegistration/Instructions.aspx என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான சில விதிமுறைகள்
* படிப்பிற்கான குறைந்த பட்ச வகுப்புகளில் பங்கேற்று இருக்க வேண்டும்
* உங்களது படிப்பிற்கு செய்முறைத் தேர்வு இருப்பின் அதை முடித்திருக்க வேண்டும்.
* மாணவர்கள் தங்களுக்கு கொடுத்த ‘அசைன்மென்ட்’ முடித்திருக்க வேண்டும்.
இப்புதிய வசதிகள் உள்ள படிப்புகள்
* Bachelor Preparatory Programme (BPP)
* Bachelor in Tourism Studies (BTS),
* Bachelors Degree Programme (BDP)
* Certificate in Guidance (CIG),
* Certificate in Teaching of English (CTE),
* Certificate in Organic Farming (COF),
* Certificate in AIDS and Family Education (CAFÉ),
* Diploma in AIDS and Family Education (DAFE),
* Certificate in Tourism Studies (CTS),
* Diploma in Tourism Studies (DTS).
மேலும் விபரங்களுக்கு www.winex.ignou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
