தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி


மார் 29, 2010 12:00 AM

மார் 29, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 29, 2010 12:00 AM மார் 29, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எஸ்.வி.என்.ஐ.டி., ), மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசின் கூட்டு முயற்சியால் 1961ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இன்ஜினியரிங் அறிவியல் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை அத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதிலும் எஸ்.வி.என்.ஐ.டி., சிறந்து விளங்குகிறது. தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக திகழ்கிறது. 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கல்லூரியில், 191 பேராசியர்கள் பணிபுரிகின்றனர். அனைத்து வசதிகளுடன் 8 மாணவர்கள் விடுதியும், 2 மாணவிகள் விடுதியும் உள்ளன. சிறந்த நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், கேன்டீன், எஸ்.பி.ஐ. வங்கி, மருந்தகம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் உள்ளன.

தேர்வு முறை
இக்கல்வி நிறுவனத்தில் 50 சதவீத இடங்கள் குஜராத் மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தேசிய அளவில் நடைபெறும் ‘கேட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மற்ற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் 20 இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

இளநிலை படிப்புகள்
பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
பி.டெக்., எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
பி.டெக்., சிவில் இன்ஜினியரிங்
பி.டெக்., எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
பி.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங்
பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்
பி.டெக்., புரடக்சன் இன்ஜினியரிங்

ஏழு இன்ஜினியரிங் படிப்புகள் உள்ளன.

முதுகலை படிப்புகள்
எம்.டெக்., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
எம்.டெக்., பிளானிங்
எம்.டெக்., வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
எம்.டெக்., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
எம்.டெக்., இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்
எம்.டெக்., கம்யூனிகேசன் சிஸ்டம்
எம்.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங்
எம்.டெக்., சிவில் இன்ஜினியரிங்
எம்.டெக்., தெர்மல் சிஸ்டம் மற்றும் டிசைன்
எம்.டெக்., டர்போ மிஷின்ஸ்
எம்.டெக்., அப்ளைடு மெக்கானிக்ஸ்

ஐந்து வருட ஒருங்கிணைந்த படிப்புகள்
எம்.எஸ்சி., வேதியியல்
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., இயற்பியல்
ஆராய்ச்சி படிப்புகள்
எம்.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், தங்களது துறைகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்புகளில் சேரலாம்.

வேலைவாய்ப்பு
கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வளாகத்தேர்வில் பங்கேற்பது பற்றி அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 1999ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இக்கல்லூரியில் நடந்து வரும் வளாகத் தேர்வில், மைக்ரோசாப்ட், டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ், ஐ.பி.எம்., , மாருதி போன்ற முன்னணி நிறுவனங்கள் பல பங்கேற்று தகுதியான மாணவர்களை தேர்வு செய்கின்றன. இதனால் இக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே, வேலை வாய்ப்பையும் பெறுகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற வளாகத் தேர்வில் 429 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us