தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/திரில்லான தடயவியல் துறை

திரில்லான தடயவியல் துறை

திரில்லான தடயவியல் துறை


மார் 29, 2010 12:00 AM

மார் 29, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 29, 2010 12:00 AM மார் 29, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தடயவியல் (தடய அறிவியல்) துறையானது, குற்றம் சம்பந்தமான காட்சிகளில் உங்களை கிளர்ச்சியுறச் செய்யலாம் அல்லது பயமுறுத்தலாம். தடயவியல் துறையின் முதன்மை பணியானது, பல்வேறு அறிவியல் சம்பந்தமான வழிவகைகள் மற்றும் கோட்பாடுகள் மூலம் குற்றங்களை விசாரணை செய்தலாகும். இன்றைய காலத்தில் கிரிமினல் மற்றும் சிவில் குற்றங்கள் உள்ளிட்ட இரண்டிலும் தடயவியல் நிபுணர்களின் பங்கு முக்கியமாக உள்ளது.

கிரிமினல் குற்றங்கள்
ஒரு குற்றம் நடந்தால், குற்றம் தொடர்புள்ள காட்சிகளிலிருந்து, அனைத்து தடயங்களையும் சேகரிக்க வேண்டும். பின் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வகங்களில் சோதனை செய்ய வேண்டும். இறுதியாக பரிசோதித்த முழுமையான ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இவற்றில் உடல்சார்ந்த ஆதாரங்களான ரத்தம், உமிழ்நீர், முடி, கை ரேகை, கால் தடம், காலணிகள் மற்றும் டயர்களின் அச்சுப் பதிவுகள் உள்ளிட்டவையும் அடங்கும்.

சிவில் குற்றங்கள்
கையெழுத்தின் கால மதிப்பு மற்றும் மோசடி குறித்து நிரூபணம் செய்வதாகும். நவீன கால சிக்கலான வழக்குகளை முடிப்பதற்கு போலீசாருக்கு தடயவியல் நிபுணர்கள் மிகவும் உதவியாக இருக்கின்றனர்.

படிப்புகள்
பி.எஸ்.சி., தடயவியல் (ஊணிணூஞுணண்டிஞி குஞிடிஞுணஞிஞு)
எம்.எஸ்.சி., தடயவியல் (ஊணிணூஞுணண்டிஞி குஞிடிஞுணஞிஞு)

தகுதிகள்
1.இளநிலை தடயவியல் படிப்புக்கு பிளஸ் 2வில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். கால அளவு 3 வருடம்.
2. முதுநிலை தடயவியல் படிப்புக்கு, இளநிலை படிப்பில் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். கால அளவு 2 வருடம்.
3. எம்.பில்., ஆய்வு படிப்புக்கு முதுநிலை தடயவியல் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
4.எம்.பி.பி.எஸ்., படிப்பில் தடயவியல் படிப்பை ஒரு பாடமாக படித்து முடித்திருப்பவர்கள், மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை உள்ளிட்ட பணியில் ஈடுபடலாம்.
5.தடய ஆய்வு தொல்லியல், தடய ஆய்வு உளவியல், தடய ஆய்வு உயிரியல், தடய ஆய்வு பொருளாதாரம் தடய ஆய்வு பொறியியல், தடய ஆய்வு மொழியியல், தடய ஆய்வு மானுடவியல் மற்றும் ரத்த வகையை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான உட்பிரிவுகள் தடயவியல் படிப்பில் உள்ளது.

இந்தியாவில் கீழ்க்கண்ட நிறுவனங்களில் தடயவியல் சம்பந்தமான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனின் தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம், புதுடில்லி. மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை.
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம், புதுடில்லி.
லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ.
மத்திய தடயவியல் துறை ஆய்வகம், ஐதராபாத்.
மத்திய தடயவியல் துறை ஆய்வகம், சண்டிகர்.
மத்திய தடயவியல் துறை ஆய்வகம், கோல்கட்டா.

வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் தடயவியல் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு போலீஸ் படையிலும், சட்டத்தை அமலாக்கும் ஏஜன்சிகள் மற்றும் சட்டம் சார்ந்த அமைப்புகளிலும் ஏராளமான பணிவாய்ப்புகள், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளன. தடயவியல் பிரிவில் உட்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர்களுக்கு, அதற்கேற்றவாறு பல்வேறு வேலைவாய்ப்புக்கள் உள்ளன. மருத்துவ ஆய்வாளர், குற்றங்களை பகுத்தாய்வு செய்பவர், குற்றக் காட்சிகளை ஆய்வு செய்பவர் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளிலும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us