தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட்

இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட்

இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட்


ஏப் 13, 2010 12:00 AM

ஏப் 13, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 13, 2010 12:00 AM ஏப் 13, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓர் தொழில்துறையின் புரட்சிக்கு பெருவாரியான வளர்ச்சி தேவைப்படுகிறது. இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ் மென்ட்டின் நோக்கமானது ""ஓரு தொழில் துறையின் வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்கள், விபத்துக்கள் மற்றும் தீமைகள் உள்ளிட்டவற்றின் அளவை குறைக்க வேண்டும்''. இவற்றை துணிகரமான பராமரிப்பு நுணுக்கங்கள் மற்றும் பாதுகாப்பான நிர்வாக செயல்பாடுகள் மூலம் மேற் கொள்ள வேண்டும். பணியாளர்களின் உடல்நலத்தையும் தரமான முறையில் மேம்படுத்த வேண்டும். மேலும், தொழில் துறையின் இயங்கு தளம் மற்றும் இடையூறுகளை நெறிப்படுத்துதல் வேண்டும்.

தற்சமயம், உலகம் முழுவதும் இயற்கை பேரழிவு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியமான
ஒன்றாகும். சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பாதுகாப்பதும் மற்றும் பணிபுரியும் தொழில் துறையின் சொத்துகளை பராமரிப்பதும், அவற்றை அதிகரிக்கச்
செய்வதும், இப்படிப்பின் நோக்கமாகும்.

இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ் மென்ட் படிப்பை, புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கற்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள், கட்டுமான நிறுவனம், உற்பத்தி பிரிவுகள், பொது பயனுடைமை, மருத்துவமனைகள், துணைப்படை நிர்வாகங்கள், பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் ஆலேசானை நிறுவனங்கள் என பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

படிப்புகள்: 1) டிப்ளமோ இன் இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு, ஒரு வருடம் பயிலக் கூடியதாகும். இப்படிப்புக்கு 10ம் வகுப்பு /பிளஸ்/டிப்ளமோ/ஐ.டி.ஐ., தகுதி போதுமானது.
2) முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு, பி.எஸ்சி., இயற்பியல்/வேதியியல்/எலக்ட்ரானிக்ஸ் படிப்பை தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.இ., மற்றும் பி.இ., முடித்திருக்க வேண்டும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. இப்படிப்பு ஒரு வருடம் பயிலக்கூடியது.
இந்தியாவில் கீழ்க்கண்ட நிறுவனங்களில் இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
1) பெரியார் மணியம்மை யுனிவர்சிட்டி, தஞ்சாவூர். http://www.pmu.edu/coade/ 2) மகாத்மா காந்தி லேபர் இன்ஸ்டிடியூட், ஆமதாபாத். http://mgliahd.org/ 3) குரு ஜம்பேஷ்வர் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, அரியானா. http://www. gju.ernet.in/distance/dcourse.htm

படிப்பின் பயன்கள்
இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ் மென்ட் படிப்பை சிறந்த முறையில் முடிப்பவர்கள், கீழ்க் கண்ட துறைகளில் அறிவு வளர்ச்சி அடைகிறார்கள்.
1)தொழிற்துறையின் உபகரணங்களை கண்காணித்தல்.
2) சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்தல்.
3) மருத்துவ கண்காணிப்பு.
4)குறைபாடுள்ள உபகரணங்களை ஆவணப்படுத்தல்.
5) தீமைகள் மற்றும் இடையூறுகளை தடுத்து நிறுத்துதல்.
6) நிர்வாகத்தின் பாதுகாப்பு தேவைகளை தொடர்ந்து ஆய்வு செய்தல் உள்ளிட்டவையாகும்.

வேலைவாய்ப்பு:
டிப்ளமோ அல்லது சான்றிதழ் பிரிவில் இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் மிக அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன. செய்ல், டிஸ்கோ, கோல் இந்தியா லிமிடெட், பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள், பொறியியல் படிப்புடன், இப்படிப்பையும் சேர்த்து முடித்தவர்களை பணிக்கு தேர்வு செய்கின்றன. இங்கிலாந்து, ஓமன், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us