தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜியோ-இன்பர்மேடிக்சில் புதிய படிப்பு

ஜியோ-இன்பர்மேடிக்சில் புதிய படிப்பு

ஜியோ-இன்பர்மேடிக்சில் புதிய படிப்பு


ஏப் 13, 2010 12:00 AM

ஏப் 13, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 13, 2010 12:00 AM ஏப் 13, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விண்வெளி ஆராய்ச்சி தொடர்புடைய துறைகளில் தொடர்ந்து இந்தியாவில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை நாம் அறிவோம். இது மாணவர்களிடையேயும் துறை சார்ந்த ஆர்வத்தைப் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த ஆர்வத்தை மேலும் செரிவூட்டும் விதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் ஜியோஇன்பர்மேடிக்சில் நான்கு ஆண்டு பி.இ., பட்டப் படிப்பை இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தத் துறையில் எம்.டெக்., மற்றும் பி.எச்டி., படிப்புகளை அண்ணா பல்கலைக் கழகம் தந்து வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக சென்னையில் வழங்கப்படும் ஜியோ இன்பர்மேடிக்ஸ் பி.இ., படிப்புக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவிலுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ., மற்றும் ஐதராபாதிலுள்ள என்.ஆர்.எஸ்.ஏ., நிலையங்களில் ஜியோஇன்பர்மேடிக்சில் எம்.டெக்., படிக்கும் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புடன் கூடிய ஈடுபாட்டின் அடிப்படையிலேயே இந்தப் புதிய படிப்புகளை அறிமுகம் செய்யும் எண்ணம் வந்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஆர்.ஓ., வின் நிதியுதவியுடன் திருநெல்வேலியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மிக நவீன ஆராய்ச்சி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படிப்புகளுக்கான பாடப்புலத்தைத் தயாரிக்க ஐ.ஐ.டி.,யிலிருந்து பி.எச்.டி., பெற்ற ஐ.எஸ்.ஆர்.ஓ., வின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உதவுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக் குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா 120 மாணவர்கள் இந்தப் படிப்புகளை இனி படிக்க முடியும் என்று தெரிகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள அதி நவீன உள்கட்டமைப்புகளின் மூலம் சர்வ தேச அளவில் பெரிய நிறுவனங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொழில் நுட்பங்களை உலகத்தரம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சிப் படிப்புகளின் மூலம் படிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us