தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பொன்விழா ஆண்டில் மோதிலால் நேரு என்.ஐ.டி.,

பொன்விழா ஆண்டில் மோதிலால் நேரு என்.ஐ.டி.,

பொன்விழா ஆண்டில் மோதிலால் நேரு என்.ஐ.டி.,


ஏப் 13, 2010 12:00 AM

ஏப் 13, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 13, 2010 12:00 AM ஏப் 13, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ளது மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. மத்திய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து 1961ம் ஆண்டு இக்கல்லூரியை துவக்கினர்.

2002ம் ஆண்டு முதல் இது நிகர்நிலை பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது. இக்கல்லூரிக்கு 1961ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 222 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இக்கல்வி நிறுவனத்தில் இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மொரீசியஸ், மலேசியா, ஈரான், ஏமன், ஈராக், பாலஸ்தீனம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். இந்தியாவின் டாப்20 தொழில் நுட்ப கல்லூரிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் புத்தக படிப்போடு, தொழில் துறை அனுபவத்தையும் பெறுகின்றனர். அடிப்படை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, புதிய பாடப்பிரிவுகள் போன்றவற்றில் சிறப்பான வசதியை பெற்றுள்ளது. கல்வி சேவையில் இந்த கல்வி ஆண்டோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

டிஜிட்டல் நூலகம், இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் ஆய்வகம், மெக்கானிக்கல் லேப் போன்ற பல வசதிகள் உள்ளன. தங்கி படிக்கும் மாணவர்களின் வசதிக்காக, 7 மாணவர்கள் விடுதி, 2 மாணவிகள் விடுதி, ஒரு முதுகலை மாணவர்களுக்கான விடுதி போன்றவை உள்ளன.

இளநிலை படிப்புகள் (4 வருடம்)
மொத்தம் 9 படிப்புகள் உள்ளன.

* பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (புரடக்சன் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங்)

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு, நாட்டிலேயே இக்கல்வி நிறுவனத்தில் தான் 1976  1977ல் முதன் முதலில் துவக்கப்பட்டது.

முதுகலை படிப்புகள் (2 வருடம்)
மொத்தம் 19 படிப்புகள் உள்ளன.
* எம்.டெக்., (டிஜிட்டல் சிஸ்டம்)
* எம்.டெக்., (டிசைன் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (இன்பர்மேசன் செக்யூரிட்டி)
* எம்.டெக்., (சாப்ட்வேர் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (அப்ளைடு மெக்கானிக்கல் )
* எம்.டெக்., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
* எம்.சி.ஏ., (3 வருடம்)
* எம்.பி.ஏ.,
பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.

வேலைவாய்ப்புகள்:
இக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வளாகத்தேர்வில் கலந்து கொள்வதற்கான சிறப்பு பயிற்சிகள் அனுபவ ஆசிரியர்கள் மூலம் வழங்கப்
படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வளாகத்தேர்வு நடத்தப் படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது படிப்பை முடிக்கும் போதே வேலைவாய்ப் பினையும் பெறுகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு www.mnnit.ac.in என்ற வெப்சைட்டை பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us