ஏப் 20, 2010 12:00 AM
ஏப் 20, 2010 12:00 AM
அ நிறம் | அளவு
ஒருவர் தம்முடைய உணர்ச்சிகளையோ, அல்லது மற்றவர்கள் உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து அதை திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றல், திறமையை உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) என்பர்.
அச்சம், கவலை, கோபம், துன்பம் போன்றவற்றை திறமையாக கையாள வேண்டும். ஒருவர் உணர்வுசார் நுண்ணறிவு பெற்றிருந்தால் நெருக்கடியான நேரத்திலும் அதிகப்படியான உணர்வுகளுக்கு இடம் அளிக்காமல் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வர். குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் பெற்றோர்களே அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள். இதன் மூலம் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் திடீர் உணர்ச்சிகளை கையாள்வதை கற்றுக் கொள்வார்கள்."அதிகமாக பேசுவதை தவிர்த்து கேட்கப் பழகுங்கள்'. பல துறைகளில் வெற்றி பெற்றவர்கள் கூறும் வெற்றி மந்திரம் இது தான். நம்முடைய கருத்தை தெரிவிப்பதில் உள்ள நாட்டம் மற்றவர் கருத்தை கேட்பதிலும் இருக்க வேண்டும்.
இளைஞர்கள் தங்கள் உணர்வுசார் நுண்ணறிவை சிறப்பாக்க சில வழிகள்:
* ஒரு செயலை செய்து முடிக்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
* நேர்த்தியாகவும், செயல்திறனுடனும் பேசுங்கள்.
* எந்த ஒரு செய்தியையும் காது கொடுத்து கேளுங்கள்.
* எவ்வித மருட்சியும் இல்லாமல் தெளிவான முடிவை எடுங்கள்.
* கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
* உங்களையும், உங்களை சுற்றி உள்ளவர்களையும் உணர்ச்சி வயப்பட்ட பிரச்னைகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
* தயக்கத்தை விட்டொழியுங்கள்.
