தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வேஸ்ட் மேனேஜ்மென்ட்

வேஸ்ட் மேனேஜ்மென்ட்

வேஸ்ட் மேனேஜ்மென்ட்


ஏப் 20, 2010 12:00 AM

ஏப் 20, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 20, 2010 12:00 AM ஏப் 20, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழலியல் துறையில் "வேஸ்ட் மேனேஜ்மென்ட்' பிரிவு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்பது கழிவுப் பொருட்களை கண்காணித்தல், சேகரித்தல், அனுப்புதல், செய்முறைப்படுத்துதல், மீள்சூழற்சி செய்தல் அல்லது நீக்குதல் என்ற அனைத்து செயல்களையும் உள்ளடக்கியது. கழிவுப்பொருள் என்னும் சொல் மனித செயல்பாடுகளால் உருவாகும் பொருட்களையே குறிக்கும். இந்த கழிவுப்பொருட்களால் மனித வாழ்வில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், சுற்றுச் சூழல் மாற்றங்கள் போன்றவற்றை தடுக்க ஏற்படுத்தப்பட்ட படிப்புதான் வேஸ்ட் மேனேஜ்மென்ட்.
சுற்றுச்சூழலியல் துறையின் உட்பிரிவாக, இந்த வேஸ்ட் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது. வளஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பது குறித்தும் இப்பாடப்பிரிவில் கற்றுத் தரப்படுகிறது. கழிவுப்பொருள் நிர்வாக படிப்பில் திட, திரவ, வாயு மற்றும் கதிரியக்க கழிவுப்பொருட்களை கையாள்வது சவாலான ஒன்றாக விளங்குகிறது.

தகுதிகள்:
வேஸ்ட் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் 2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். சிறந்த அறிவியல் அறிவு, ஆராய்ச்சிகள் பற்றிய ஆர்வம் மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறனும் இத்துறைக்கு இன்றியமையாதது. மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் உள்ளவர்கள் இது சார்ந்த கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்று வேஸ்ட் மேனேஜ்மென்ட் பட்டபடிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

படிப்புகள்:
வேஸ்ட் மேனேஜ்மென்ட் துறையில் எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவுகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழலியல் துறையின் உட்பிரிவுகளில் வேஸ்ட் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவு காணப்படுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற பட்ட படிப்புகளிலும் வேஸ்ட்மேனேஜ்மென்ட் பாடப்பிரிவுகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்: வேஸ்ட் மேனேஜ்மென்ட் துறை பாடப்பிரிவுகள் சுற்றுச்சூழலியல் கல்வி நிறுவனங்களில் காணப்படுகின்றன. அவற்றில் சில முக்கிய நிறுவனங்கள்.
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட், நவிமும்பை
  • ராஜஸ்தான் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர்
  • நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் என்விரான்மென்ட், லக்னோ
  • ஸ்கூல் ஆப் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட், டில்லி
  • டெரி பல்கலைக்கழகம், டில்லி

வேலைவாய்ப்புகள்:
சுற்றுச்சூழலியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிறுவனங்
களில் இத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. மேலும் இது சம்பந்தமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேஸ்ட் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காணப்படுகிறது. சுகாதார அமைப்புகள், இயற்கை சார்ந்த சமூக அமைப்புகள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக காணப்படுகின்றன. இது சார்ந்த தகவல் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்த துறையில் தனியார் நிறுவனங்களில் ஆரம்ப கட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. வேஸ்ட் மேனேஜ்மென்ட் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயற்கையை காப்பாற்றும் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் மனநிறைவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us