தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு சில டிப்ஸ்

கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு சில டிப்ஸ்

கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு சில டிப்ஸ்


ஏப் 27, 2010 12:00 AM

ஏப் 27, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 27, 2010 12:00 AM ஏப் 27, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* நீங்கள் முதல் தர மாணவராகவோ அல்லது கடைசி தர மாணவராகவோ இருக்கலாம். ஆனால், உங்களது செயல்திறனில் நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அதே சமயம் உங்களது தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக நீங்கள் கல்லூரி பேராசிரியரையோ அல்லது பயிற்சி மையத்தையோ நாடலாம்.

* படிப்பதற்கு உகந்த நல்ல இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நூலகம், படிக்கும் அறை அல்லது காலியான வகுப்பறைகளாக கூட இருக்கலாம்.
* அதிகமான பாடப்பகுதிகள் இருப்பதால் மனப்பாடம் செய்வது பலனளிக்காது. புரிந்து கொண்டு படித்தால் தான் எளிதாக நினைவிற்கு கொண்டு வர முடியும். உங்களது பாடப் பகுதிகளை தினந்தோறும் படிப்பது சாலச் சிறந்தது.
*  மன அழுத்தமும், சோர்வும் உங்களது நினைவாற்றலை கெடுத்து விடும். அதனால், நன்றாக சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக உறங்கவும் வேண்டும் என்பது முக்கியமானது.
* வகுப்புகளை ""கட்'' அடிக்காதீர்கள். நீங்கள் வகுப்புகளுக்கு சென்று பாடத்தை கவனித்து குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தேவையானது. ஏனென்றால், தேர்வு சமயத்தில் குறிப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
* ஒவ்வொரு நாளும் படிப்பதற்கான நேரத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள். தேர்வு காலத்திற்குஉரிய திட்டமிடுதலை முன் கூட்டியே செய்து கொள்ளுங்கள்.
* முக்கியமான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக, நீங்களே புதிய முறையிலான நினைவூட்டும் வாசங்களை அமைத்துக் கொள்ளுங்கள். புதிய உதராணங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகத்தில்
முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
* முக்கியமான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள
முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். பின், அதை பரிசோதித்தும் பாருங்கள்.
* தேர்வு எழுதும் போது எளிதான வினாக்களுக்கு முதலில் விடையளியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கான கால அளவை மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us