ஹனிவெல் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு அதிகப் பணி வாய்ப்புகள்
ஹனிவெல் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு அதிகப் பணி வாய்ப்புகள்
ஏப் 28, 2010 12:00 AM
ஏப் 28, 2010 12:00 AM
ஆட்டோமேஷன் மற்றும் தொழில் நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனமாக அமெரிக்காவைச் சார்ந்த ஹனிவெல் இண்டெர்நேஷனல் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. ஆகாய விமானங்கள் மற்றும் கிரீன் பியூவல் ஆகியவற்றுக்கு உலக அளவில் நிலவி வரும் கடுமையான தேவைகளை மனதில் கொண்டு இந்த நிறுவனம் அதிகளவில் இந்தியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள விண்கலங்களுக்கான காக்பிட்டை இந்த நிறுவனமே தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த கிருஷ்ணா மிக்கிலினெனி என்பவர் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரை சர்வதேச நிர்வாகக் குழுவின் உறுப்பினராக மாற்றியதன் மூலம் இந்தியர்களின் மேல் இந்த நிறுவனத்திற்கு உள்ள நம்பிக்கையும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்தியாவில் பொறியியல் தொடர்புடைய வளங்கள் அதிகம் உள்ளதாலும், இந்தியச் சந்தை தொடர்ந்து வளர்ந்து வருவதாலும் தங்கள் நிறுவனத்தில் அதிகளவு இந்தியர்களைப் பணியிலமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ வட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைகளை மனதில் கொண்டு ஹனிவெல் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெறும் 50 ஊழியர்களைக் கொண்டு 5 கோடியளவு மட்டும் மூலதனமாகக் கொண்டிருந்த ஹனிவெல் நிறுவனம் தற்போது 11 ஆயிரம் ஊழியர்களுடன் 50 கோடி மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஏரோஸ்பெஸ், ஆட்டோமேஷன், டிரான்ஸ்போர்ட்டேஷன், சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள கார்களின் இன்ஜினை மாற்றுவதைத் தவிர்க்கும் கிரீன் பியூவல் போன்ற துறைகளில் சிறப்பு பெற்றுள்ளது.
