ஏப் 28, 2010 12:00 AM
ஏப் 28, 2010 12:00 AM
அ நிறம் | அளவு
கள ஆய்வுகளை மேற்கொள்வதில் மாஃபோய் ராண்ட்ஸ்டாட் என்ற நிறுவனம் உலகப் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒர்க் மானிட்டர் சர்வே என்ற கள ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் சாராம் சங்களை உங்களுக்காகத் தருகிறோம்.
தற்போது பணியில் உள்ள தனியார் துறை ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், அரசுப் பணியில் உள்ள ஊழியர்கள் தங்களின் தற்போதைய வேலையை விட்டு பிற பணிகளுக்கு செல்ல பெரிதும் அஞ்சுகிறார்கள். அரசுத்துறையில் உள்ள ஊழியர்களில் 59 சதவிகிதம் பேர் தற்போதைய பணியிலிருந்து விலகத் தயாராக இருக்கும் நிலையில் தனியார் துறையில் இது 85 சதவிகிதமாக உள்ளது.
ஆனால் பணிப்பாதுகாப்பு குறித்த அம்சத்தில் 13 சதவிகித அரசு ஊழியர்கள் மட்டுமே அச்சப்படும் நிலையில், தனியார் துறையில் இது மிக அதிகமாக உள்ளது. எனவே சமூகப் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் அரசுத் துறையே தனியார் துறையைவிட சிறந்து விளங்குகிறது. சென்னை, புது டில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மும்பையைச் சேர்ந்த ஊழியர்கள் பணியிழப்பு குறித்து குறைந்த அளவே கவலை கொள்கிறார்கள். பணியில் திருப்தியைப் பொறுத்த மட்டில் மும்பை மற்றும் சென்னையைச் சார்ந்த ஊழியர்களில் 84 சதவிகிதம் பேர் திருப்தியாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது பெங்களூருவில் 74 சதவிகிதமாகவும், புது டில்லியில் 66 சதவிகிதமாகவும் உள்ளது. நிர்வாகப் பணியிடங்களைப் பொறுத்த மட்டில் நடு நிலை அதிகாரிகளே அதிக ஸ்திரத்தன்மை கொண்டிருப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.