விசாகப்பட்டினம் இரும்புத் தொழிற்சாலையில் டெக்னிகல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி வாய்ப்பு
விசாகப்பட்டினம் இரும்புத் தொழிற்சாலையில் டெக்னிகல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி வாய்ப்பு
ஏப் 28, 2010 12:00 AM
ஏப் 28, 2010 12:00 AM
விசாகப்பட்டினம் இரும்புத் தொழிற்சாலையில் பொறியியல் படித்தவர்களுக்கு 195 டெக்னிகல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் மெட்டலர்ஜி பிரிவில் 70 காலியிடங்களும், மெக்கானிகல் பிரிவில் 60 காலியிடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 30 காலியிடங்களும், கெமிக்கல் பிரிவில் 15 காலியிடங்களும், சிவில் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் தலா 6 இடங்களும், செராமிக்ஸ் பிரிவில் 5 காலியிடங்களும், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 3 காலியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக பொறியியல் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுதுபவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
உடற் தகுதி: விண்ணப்பிப்பவர்களுக்கு கல்வித் தகுதியுடன் குறைந்த பட்ச உடற் தகுதிகளும் தேவைப்படுகிறது. நல்ல திடகாத்திரமான உடல் நலத்தைக் கொண்டிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 150 செ.மி.,யும், எடை குறைந்த பட்சம் 45 கிலோவும் இருக்க வேண்டும். கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒவ்வொரு கண்ணிலும் பார்வை குறைபாடு 4.00 க்குள் இருக்க வேண்டும். மாறுகண் மற்றும் வண்ணக் குறைபாடுள்ளவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. உயரம் மற்றும் எடையில் மட்டும் பெண்களுக்கு சலுகைகள் உள்ளன.
தேர்ச்சி முறை: இந்தப் பணிகளுக்கான தேர்ச்சி முறை இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும். பிரிலிமினரி எழுத்துத் தேர்வு சென்னை, விசாகப்பட்டினம், ஐதராபாத், புது டில்லி, கோல்கட்டா மற்றும் மும்பை ஆகிய மையங்களில் ஒரே நாளில் நடைபெறும். இறுதி எழுத்துத் தேர்வு விசாகப்பட்டிணத்தில் மட்டும் நடைபெறும்.
பயிற்சி: 2 பேட்ஜுகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்கள் ஒரு ஆண்டு காலம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
விண்ணப்பக் கட்டணம் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/ கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் மட்டுமே செலுத்த முடியும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் தேவையில்லை. கட்டணத்தை "RINL/VSP Power Jyothi Current Account No : 30589461220" என்ற அக்கவுன்டில் செலுத்த வேண்டும்
விண்ணப்பிப்பது எப்படி: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதிகளும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முக்கியதேதிகள்:
ஆன்லைன் பதிவு துவங்கும் நாள் : 24.04.2010
ஆன்லைன் பதிவு முடியும் நாள் : 10.05.2010
பதிவுத் தாளை அனுப்ப இறுதி நாள் : 17.05.2010
இணையதள முகவரி : www.vizagsteel.com
