தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பசுமை வாழ்விற்கான டிப்ஸ்

பசுமை வாழ்விற்கான டிப்ஸ்

பசுமை வாழ்விற்கான டிப்ஸ்


மே 06, 2010 12:00 AM

மே 06, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 06, 2010 12:00 AM மே 06, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

  •  கால்நடைகளால் <18 சதவீத கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உலகம் முழுவதும் அதிகரிக்கிறது. இது சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியதாகும். அதனால் நாம் சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். குறைந்தபட்சம் மாட்டிறைச்சியையாவது தவிர்க்க வேண்டும்.
  • கடந்த மூன்று மாதங்களாக பயன்படுத்திய தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் அளவை குறித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் அளவில் 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதை இலக்காக வையுங்கள். இதன் மாற்றத்தை நீங்களே உணர்ந்து பயனடைவீர்கள்.
  • உங்களது அலுவலகத்திலோ அல்லது வீடுகளிலோ கரியமிலவாயுவின் அடிச்சுவடு குறித்த வரைபடம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வழிகளில் எல்லாம் கரியமிலவாயு அதிகரிக்கிறது என்பதை ஒவ்வொருவரும் பார்க்கும் போது, இதன் அளவு குறைய வாய்ப்பிருக்கிறது.
  • வேக வைக்காத காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும். நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஆற்றலையும் சேமிக்கலாம்.
  • நமது தேவைகள் சிலவற்றுக்கு சூரிய சக்தி மூலம் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம்.
  • நாம் பயன்படுத்தும் 95 சதவீத பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுபயன்பாடு செய்யப்படுவதில்லை. இதனால் பாட்டில் தண்ணீருக்கு விடை கொடுத்து விட்டு, வடிகட்டிய குழாய் தண்ணீரை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் பணமும் மிச்சமாகும், இவ்வுலகமும் பசுமையாக இருக்கும்.
  • உங்களுக்கு பிடித்தமான நபருக்கு பூக்களை கொடுப்பதை விட, உயிருள்ள தாவரத்தை பரிசாக கொடுக்கலாம். தாவரம் நீண்ட காலத்திற்கு பசுமையாக இருக்கும். ஆனால், பூக்கள் சில நிமிடங்களிலே வாடி குப்பைத் தொட்டியைத் தான் அலங்கரிக்கும்.
  • பயன்படுத்திய காலியான பால் கொள்கலனில் பூக்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்கலாம்.
  • குளிர்சாதனப்பெட்டியில் உள்ள கன்டென்சர் காயில்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் குளிர்சாதனப் பெட்டியின் ஆற்றல் அதிகரிக்கும். மின்சாரமும் சிக்கனமாகும்.
  • உங்களது வீட்டு உபயோக சாதனங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் திறனும் அதிகரிக்கும். நீண்ட காலமும் உழைக்கும். ரொம்ப பழைய சாதனங்களை மாற்றி விடுவது மிகவும் நல்லது.
  • குறைந்த தூர பயணத்திற்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். சைக்கிளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
  • மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள். பிரிட்ஜை காரணமில்லாமல் திறப்பதும், திறந்தால் மூடாமல் இருப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஜன்னல் கதவை திறந்து வைத்துக் கொண்டு ஏ.சி., யை பயன்படுத்தாதீர்கள்.
  • எந்த பொருட்களையெல்லாம் மறுபடியும் பயன்படுத்த முடியுமோ, அவற்றை மட்டும் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
  • தூய்மையான தண்ணீரில் பாத்திரங்களை கழுவுவதை தவிர்த்து விடுங்கள்.
  • போக்குவரத்து சிக்னல், போக்குவரத்து நெருக்கடி ஆகிய இடங்களில் இன்ஜினை ஆப் செய்து விடுங்கள். ரோட்டில் நண்பரை பார்த்து பேசும் போதும், மொபைல் போன் பேசும் போதும் இன்ஜினை ஆப் செய்து விடுங்கள்.
  • இயற்கை வளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். கட்டட வேலைக்கு பயன்படுத்தப்படும் மரத்துண்டுகள் மற்றும் எழுதப் பயன்படும் பேப்பர்கள் உள்ளிட்டவற்றை குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.
  • பலூன்களை பறக்க விட்டு மகிழ்வதை, ஓர் எல்லைக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
  • அதிகமான மரக்கன்றுகளை நடுங்கள். பயன்பாடு இல்லாத போது கம்ப்யூட்டர்களை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள். பிற இடங்களுக்கு செல்வதற்கு பொது பேருந்துகளை பயன்படுத்துங்கள். வேண்டுமென்றால், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வாகனத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us