தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டெஸ்கோ ரீடெய்ல் செயின் குழுமத்தில் பணிவாய்ப்பு

டெஸ்கோ ரீடெய்ல் செயின் குழுமத்தில் பணிவாய்ப்பு

டெஸ்கோ ரீடெய்ல் செயின் குழுமத்தில் பணிவாய்ப்பு


மே 07, 2010 12:00 AM

மே 07, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 07, 2010 12:00 AM மே 07, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சில்லரை வர்த்தகத்தில் உலகப் பெயர் பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ ரீடெயில் நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி வரை லாபம் 9.3 சதவிகித அளவு அதிகரித்தது. இதற்கு ஆசிய நாடுகளில் இந்த நிறுவனத்தின் கிளைகளின் அபரிமிதமான வளர்ச்சியே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனம் வரும் ஆண்டில் மட்டும் புதிதாக 16 ஆயிரம் பணி வாய்ப்புகளை
உருவாக்கத் திட்டம் தீட்டி வருகிறது.

டெஸ்கோ நிறுவனத்தில் தற்போது உலகெங்கும் 14 நாடுகளில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இந்த நிறுவனம் தற்போது ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் கிளைகளைப் பரப்பி வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள பணியிடங்களில் 9 ஆயிரம் இடங்கள் பிரிட்டனில் இருக்கும் என்று தெரிகிறது.
சர்வதேசப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் இந்த நிறுவனம் வளர்ச்சியையே கண்டிருப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் மிக அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என்று இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ செய்திகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us