தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொலைத்தொடர்பு படிப்புகள்

தொலைத்தொடர்பு படிப்புகள்

தொலைத்தொடர்பு படிப்புகள்


மே 11, 2010 12:00 AM

மே 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 11, 2010 12:00 AM மே 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எல்லை கடந்த வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக தொலைத் தொடர்பு படிப்புகள் உள்ளன. இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு இப்படிப்புக்கு இருக்கிறது. மொபைல் போன்கள், கேபிள் "டிவி', கம்யூட்டர் கட்டமைப்பு, "டிவி' ரேடார், செயற்கைக்கோள்கள் மற்றும் போக்குவரத்து வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொலைத் தொடர்பு சாதனங்கள் குறித்து இப்படிப்பில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

இன்டர்நெட், மொபைல் போன் மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட துறைகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் தொலைத்தொடர்பு பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். திட்டத்தை நிர்வகித்தல், தொழில்நுட்ப திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றில் மிகச் சிறந்த வல்லுநராக தொலைத் தொடர்பு பொறியாளர்கள் இருக்க வேண்டும். மேலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

படிப்புகள் மற்றும் தகுதிகள்:
பி.டெக்., தொலைத்தொடர்பு பொறியியல் (Telecommunication Engineering) படிப்புக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை கட்டாயமாக தேர்வு செய்து படித்து முடித்திருக்க வேண்டும். ஐ.ஐ.டி., போன்று மாநில அளவிலான சில நுழைவுத்தேர்வுகள் இப்படிப்புக்கு நடத்தப்படுகிறது. முதுநிலை தொலைத் தொடர்பு பொறியியல் படிப்புக்கு ஏ.ஐ.சி.டி.இ., யால் (All India Council of Technical Education) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.டெக்., தொலைத் தொடர்பு பொறியியல் படித்திருக்க வேண்டும்.

படிப்பின் பயன்கள்: தொலைத்தொடர்பு படிப்புகள் மூலம் மாணவர்களுக்கு டிசைன், இன்ஸ்டால், டிரபிள்சூட் மற்றும் நெட்வொர்க் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், சாப்ட்வேர், ஹார்டுவேர் மற்றும் இன்டர்நெட் தொடர்பான ஏறக்குறைய அனைத்து விசயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பு அமைகிறது.

பயிற்றுவிக்கும் நிறுவனங்கள்:
1) ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே. http://www.aitpune.com/

2) அசாம் இன்ஜினியரிங் காலேஜ், அசாம். http://www.aec.ac.in/

3) பாபாசாகிப் நய்க் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மகாராஷ்டிரா.

http://www.bncoepusad.com/

4) இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்கல் அண்டு மரைன் என்ஜினியரிங், பெங்களூரு. http://www.iameindia.org/

5) பெங்கால் இன்ஜினியரிங் காலேஜ்,மேற்கு வங்காளம். http://www.becs.ac.in/

6) பாரதி வித்யபீத்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், புதுடில்லி. http://www.bvcoend.ac.in/

7) பி.எம்.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு. http://www.bmsce.in/

8) பி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அரியானா. http://www.bmsit.org.in/

9) தயானந்தா சாகர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பெங்களூரு. ht-tp://www.dayanandasagar.edu/

10) டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு. http://www.drait.org/

11) டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி, மகாராஷ்டிரா. http://www.dbatu.ac.in/

12) காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோவா. http://www.gec.ac.in/

வேலைவாய்ப்பு: தொலைத்தொடர்பு துறையை பொறுத்த வரைக்கும் இந்தியாவில் ஏராளமான பணிவாய்ப்புகள் உள்ளன. சிப் டிசைன், எம்பேடடு சாப்ட்வேர் டெவலப்மென்ட், டெலிகாம் மார்க்கெட்டிங், புரோடோகால் மற்றும் வி.எல்.எஸ்.ஐ., உள்ளிட்ட துறைகளில் ஆய்வு பொறியாளராக பணிபுரியலாம். மேலும், வி.எஸ்.என்.எல்., பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ், டாடா இண்டிகாம் உள்ளிட்ட நிறுவனங்களில் நெட்வொர்க் செக்யூரிட்டி நிபுணராக பணிபுரியலாம். பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, வோடபோன், ஆப்பிள் மற்றும் நார்டெல் நெட்வொர்க்கிலும் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்புகள் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us