தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட், நொய்டா

இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட், நொய்டா

இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட், நொய்டா


மே 11, 2010 12:00 AM

மே 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 11, 2010 12:00 AM மே 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஓட்டல் நிர்வாகத் துறையின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அன்டு கேட்டரிங் டெக்னாலஜி (என்.சி. எச்.எம்.சி.டி.,) என்ற அமைப்பின் கீழ் இயங்குகிறது.

இந்த நிறுவனத்தின் கீழ் 24 ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகளும், ஏழு உணவு மேலாண்மை கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இது இந்திய அரசின், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தில், ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி தொடர்பான 12 பாடப்பிரிவுகள் காணப்படுகின்றன.

இந்த கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் உள்ள இடங்கள்:
ஆமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டில்லி, கேங்டோக், கோவா, குவாலியர், குர்தாஸ்புர், கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோல்கட்டா, லக்னோ, மும்பை, பாட்னா, சிம்லா, ஸ்ரீநகர், ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இதன் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகிகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிகின்றனர்.

பாடப்பிரிவுகள்:
இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் பாடப்பிரிவுகள் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. இங்கு பட்டப்படிப்புகள், பட்டமேல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன.

*  எம்.எஸ்சி., ஆஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டி ரேஷன்
* பி.எஸ்சி., ஓட்டல் மேனேஜ்மென்ட் அன்டு கேட்டரிங் டெக்னாலஜி
* பி.ஜி., டிப்ளமோ இன் அக்காம்டேஷன் ஆப்பரேஷன் அன்டு மேனேஜ்மென்ட்
* பி.ஜி., டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அன்டு ஆஸ்பிட்டல் புட் சர்வீஸ்
*  கிராப்ட்மேன்ஷிப் கோர்ஸ் இன் புட் புரடக்ஷன்
* கிராப்ட்மேன்ஷிப் கோர்ஸ் இன் புட் அண்டு பிவரேஜ் சர்வீஸ்

டிப்ளமோ படிப்புகள்:
* புட் புரடக்ஷன்
* புட் அண்டு பிவரேஜ் சர்வீஸ்
* பிரன்ட் ஆபிஸ்
* ஹவுஸ் கீப்பிங்
* பேக்கரி அண்டு கான்பெக்ட்சனரி
மேலும் இங்கு ஓட்டல் அண்டு கேட்டரிங் மேனேஜ்மென்ட் என்ற சான்றிதழ் படிப்பும் உள்ளது.

வேலைவாய்ப்புகள்:
ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி முடித்தவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன. ஓட்டலில்
அவர்களுக்கு ஓட்டல் நிர்வாக பயிற்சியாளர், வாடிக்கையாளர் சேவை அதிகாரி, சமையலறை மற்றும் ஓட்டல் நிர்வாக மேலாளர் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன. விமானம் மற்றும் கப்பல் நிறுவனங்களில் உள்ள உணவு பிரிவுகளில், சிறப்பான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளன.

உயர்தரமான பாஸ்ட் புட் கடைகள், மருத்துவமனையில் உள்ள உணவுப்பிரிவுகள் ஆகியவற்றில் நல்ல பணிகள் உள்ளன. ஹாஸ்பிட்டாலிடி அட்மினிஸ்டிரேஷன் முடித்தவர்களுக்கு, சுற்றுலாத் துறையில் பணிவாய்ப்புகள் காணப்படுகின்றன. இவர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் பணியாற்ற முடியும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள், தனியாக ஓட்டல் தொடங்குவதன் மூலம் சிறப்பான வருமானத்தை பெற முடியும். மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் விபரங்களை http://www.nchmct.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us