மே 11, 2010 12:00 AM
மே 11, 2010 12:00 AM
ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவது தான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தருவதாக இருக்கிறது. ஆனால் பெயர் பெற்றிருக்கும் சில தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களே கூட இந்த அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். நாட்டில் 201 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இது போல செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
* இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ், ஐதராபாத்
* ஐ.சி.எப்.ஏ.ஐ., பிசினஸ் ஸ்கூல் (டில்லி, குர்கான், சண்டிகார்)
* அன்சால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குர்கான்,
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட், டில்லி
* ஜே.கே. பிசினஸ் ஸ்கூல், குர்கான்,
* சிக்கிம் மனிப்பால் யுனிவர்சிடி, பெங்களூரு போன்ற புகழ் பெற்ற நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளுக்குக் கூட இன்னமும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் 74 நிறுவனங்களும், டில்லியில் 24 நிறுவனங்களும், கர்நாடகாவில் 22 நிறுவனங்களும், தமிழ்நாட்டில் 19 நிறுவனங்களும், உ.பி.,யில் 13 நிறுவனங்களும் மேற்கு வங்கத்தில் 13 நிறுவனங்களும் அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பின் அங்கீகாரம் இல்லாமல் எந்தப் படிப்பும் தொடங்கப்படுவதோ மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதோ கூடாது என்பது அந்த அமைப்பின் விதியாகும்.
போலியான பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பது உ.பி.,யில் தான். அங்கு 8 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. டில்லியில் 7 உள்ளன. மாணவர்கள் போதிய விழிப்புணர்வுடன் இவற்றை தெரிந்து கொண்டு அவற்றில் சேருவதைத் தவிர்க்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ.,யும் யு.ஜி.சி.,யும் எச்சரித்துள்ளன.
