மே 29, 2010 12:00 AM
மே 29, 2010 12:00 AM
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்கு வசதியாக, ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.
எம்.எஸ்சி., (அனிமேசன்), எம்.எஸ்சி., (பயோ மெடிக்கல் சயின்ஸ்), எம்.எஸ்சி., (ஜியோ சயின்ஸ்), எம்.எஸ்சி., (லைப் சயின்ஸ்), எம்.எஸ்சி., (மீடியா அண்டு கம்யூனிகேசன்) மற்றும் எம்.எஸ்சி., (மெட்டீரியல் சயின்ஸ்) போன்ற 6 ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
எம்.ஏ., (வரலாறு)
பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சார்பில் கடந்த 20082009 கல்வி ஆண்டு முதல், ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.ஏ., வரலாறு படிப்பை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.
பிளஸ் 2 படிப்பில் கலை அல்லது அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இப்படிப்பில் சேரலாம். ஐ.ஏ.எஸ்., (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இப்படிப்பின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பு பயிலும் மாணவர்கள் சமூக நீதி, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல் போன்ற பாடங்கள் புதுப்பிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுத உதவும்.
மேலும் இப்படிப்பு பயிலும் தொல்லியல், ஆவணவக்காப்பக முறைகள், கல்வெட்டியல், சுற்றுலா நிர்வாகம் போன்ற துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்ப வரலாறு, சர்வதேச உறவுகள், பொது அறிவு, நிகழ்கால நடப்புகள் போன்ற பாடங்களும் போதிக்கப்படுகின்றன.
மேலும் தகவல்களைப் பெற பல்கலைக்கழத்தின் என்ற இணையதளம் மற்றும் 04312407042 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
