தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/படிப்பு இங்கு கஷ்டமே இல்லை

படிப்பு இங்கு கஷ்டமே இல்லை

படிப்பு இங்கு கஷ்டமே இல்லை


மே 25, 2010 12:00 AM

மே 25, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 25, 2010 12:00 AM மே 25, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"படிப்பது எப்போதுமே கஷ்டமே அல்ல. அது வாழ்க்கை முழுவதும் பயன்படக்கூடியது என்ற கருத்தை மாணவர் மத்தியில் உருவாக்குவதாலே எங்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெறுகிறார்கள்' என்றார் எஸ்.ஆர்.வி., பள்ளி தாளாளர் குமாரவேல். பிளஸ் 2 தேர்வு எழுதிய இப்பள்ளியின் 574 மாணவர்களில் 114 மாணவர்கள் 1,100 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றிருக்கிறார்கள். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது:

எங்களுடைய நிர்வாகிகள் அனைவருமே ஆசிரியர்கள். மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தேர்ந்த ஆசிரியர்கள் இவர்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். மாணவர்கள் எதிர்கால சமுதாயத் துக்குப் பயன்படுபவர்களாக உருவாக்க வேண்டும், பெற்றோர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். பாடத்தை 5 யூனிட்டாக பிரித்து நடத்தி தேர்வு வைக்கிறோம். பின்னர் பாடத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, அதற்கு தேர்வு வைப்போம். ரிவிசன் டெஸ்ட்களும் வைக்கிறோம்.

ஒரு பாடத்தை தொடர்ச்சியாகப் படிக்க நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். அதுவே அவர்கள் வெற்றியடைய காரணமாக அமைகிறது. மாணவர்களின் செயல் பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதனால் அவர்கள் சிறப்பாகச் செயல்படமுடிகிறது. ஆண்கள் பள்ளியிலிருந்து எங்கள் மாணவர்கள் மருத்துவத்துக்கு 100 பேர் தேர்வாகிக் செல்வார்கள்.

இன்ஜினியரிங் டாப் 10 கல்லூரிகளில் குறைந்தது 100 பேர் இடம் பெற்று விடுகிறார்கள். விடுதியில் பெற்றோர்களின் வேலையை வார்டன்கள் செய்கிறார்கள். அவர்களைப் படிக்க வைக்கும் வேலையை கவனமாகச் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பதில் முழுமையான சுதந்திரம் கொடுக்கிறோம். மாணவர்களின் தேவையைக் கருதி, திருச்சியில் எங்கள் பள்ளி செயல்படுகிறது.
பள்ளிக் கல்வியையே நாங்கள் முழு நேரமாக, சிறப்பானதாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். மாணவர்கள் மத்தியில் படிப்பது எளிது என்ற கருத்தை பதிய வைக்கிறோம். சுலபமாகப் படிப்பதற்கான வழிமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். பாடத்தின் மீது விருப்பத்தை ஏற்படுத்தினாலே மாணவர்கள் படிப்பது எளிதாகிவிடும். படிப்பது கஷ்டம் என்று எப்போதுமே சொல்லக் கூடாது.

படிப்பதால் வாழ்க்கைக்குப் பயன்படும் என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுடைய அணுகுமுறை நேர்மறையானது. பெற்றோர்களை வைத்துத்தான் பிள்ளைகளுக்கு அறிவுரைகள் சொல்கிறோம். மாணவரிடம் உள்ள நிவர்த்தி செய்யக் கூடிய குறைகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us