தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான படிப்புகள்

பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான படிப்புகள்

பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான படிப்புகள்


ஜூலை 19, 2010 12:00 AM

ஜூலை 19, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 19, 2010 12:00 AM ஜூலை 19, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, நம் ராணுவத்தின் போர்முறைத்திறம் போன்றவற்றை படிப்பது, பாதுகாப்பு மற்றும் ராணுவம் (Defence and Strategic Studies)  படிப்பின் சிறப்பம்சமாகும். ஆஸ்தி
ரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, தென்ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த படிப்பை பள்ளியிலிருந்தே கற்றுத் தருகின்றன.

ராணுவம் சார்ந்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு, அணுசக்திக் கொள்கை, நிலப்பகுதிகளின் அமைப்பு, போர் குறித்து அறிஞர்களின் கருத்து, ஆய்வுகள், ஆட்சியியல், ஜர்னலிசம் ஆகியவை பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

ராணுவக்கல்வி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நம்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. எம்.ஏ., எம்.பில்.,, மற்றும் பி.எச்.டி.,பிரிவில் இதற்கான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பயிலும் நிறுவனங்கள்
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in )
* குருநானக் கல்லூரி, சென்னை (www.gurunanakcollege.in)
* புனே பல்கலைக்கழகம், புனே (www.unipune.ac.in)
* பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா (http://punjabiuniversity.ac.in )
* வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகம், ஜல்கான் (www.nmu.ac.in)
* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி (www.jnu.ac.in)
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் (www.puchd.ac.in)
* கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா (www.caluniv.ac.in)

வேலைவாய்ப்பு
இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, மற்றும் அரசு துறைகளில் கமிஷன் அலுவலராக பணி அமர்த்தப்படுவார்கள். இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுப்பிரிவில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடலாம். யு.பி.எஸ்.சி.,தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த படிப்பு இடம் பெற்றுள்ளது.

எனவே இத்தேர்வின் வாயிலாக அரசுப் பணியில் எளிதில் இடம் பெறலாம். யு.ஜி.சி., மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த படிப்பில் பி.எச்.டி., படிப்பவர்களுக்கு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குகிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த படிப்பை படிப்பதன் வாயிலாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்கலாம்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us