ஜூலை 19, 2010 12:00 AM
ஜூலை 19, 2010 12:00 AM
மதுரையில், ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக் கல்லூரி, இசைப் பயிற்சியை சிறப்பாக அளித்து வருகிறது. வாய்ப்பாட்டு, வீணை, வயலின்,
மிருதங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள இக்கல்லூரி உதவுகிறது.
மதுரை, கோகலே ரோட்டிலுள்ள லட்சுமி சுந்தரம் ஹால் வளாகத்தில் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். மதுரை காமராஜர் பல்கலையின் அங்கீகாரம் இப்படிப்புகளுக்கு உள்ளது. 1966லிருந்து செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் பயின்றவர்கள் தற்போது இசைத்துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
இக்கல்வி நிறுவனத்தின் செயற்குழுவின் தலைவராக கணபதி சர்மா, செயலராக சீனிவாசன், மற்றும் கவுரவ உறுப்பினர்களாக டி.வி.எஸ்., குடும்பத்தினரான சோபனா ராமச்சந்திரன், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி மற்றும் ஆடிட்டர் நாராயணசாமி ஆகியோர் உள்ளனர்.
இசையில் ஆராய்ச்சிப் பட்டங்களான எம்.பில், பி.எச்.டி.,யும் இக்கல்லூரியில் வழங்கப்படுகின்றன.
நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள், இசை பயிற்சிக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவர். இசையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 0452 253 0957
