தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேர்முகத்தேர்வில் நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்!!

நேர்முகத்தேர்வில் நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்!!

நேர்முகத்தேர்வில் நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்!!


ஜூலை 19, 2010 12:00 AM

ஜூலை 19, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 19, 2010 12:00 AM ஜூலை 19, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் இன்டர்வியூக்களில் கேட்கும் பொதுவான கேள்விகளில் சில,

* உங்களுடைய மிகப்பெரிய பலம் என்ன?
* உங்களுடைய பலவீனம் என்ன?
* நீங்கள் பணிபுரிய எங்கள் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
* எங்கள் நிறுவனத்தை பற்றி உங்களுக்கு பரிச்சயமான விஷயங்கள் என்னென்ன?
* நீங்கள் இந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்?
* தற்போது பார்க்கும் வேலையை விடுவதற்கான காரணம் என்ன?
 (ஏற்கனவே நீங்கள் பணியாற்றியிருக்கும் பட்சத்தில்)
* நீங்கள் செய்த அல்லது செய்ய விரும்பும் சாதனை தான் என்ன?
அல்லது சாதனை செய்யும் எண்ணம் ஏதுமில்லையா?
* உங்களுடைய லட்சியம் அல்லது அடைய விரும்பும் இலக்கு என்ன?
* அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?
* நீங்கள் இந்த வேலைக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
* நீங்கள் இந்த வேலைக்காக இடம் மாறி செல்ல தயாராக உள்ளீர்களா?
* இரவு நேர வேலை மற்றும் வார விடுமுறை நாட்களில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் உள்ளதா?
* நீங்கள் வேறு எந்த நிறுவனத்திலாவது வேலைக்காக விண்ணப்பித்துள்ளீர்களா?

இதுதவிர வழக்கமாக கேட்கப்படும் "உங்களை பற்றி அறிமுகம் செய்யுங்கள்' என்ற  கேள்விக்கும், நீங்கள் சரியான பதிலை அளிக்கும் பட்சத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி.மேலும் நீங்கள் பதிலளிக்கும் போது பதட்டம் இல்லாமல் இயல்பாக, புன்னகை ததும்பிய முகத்துடன் பதிலளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, உங்களது பதில்கள் நேர்மையாகவும், வெளிப் படையாகவும், தெளிவான உச்சரிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதைக்கு எதையாவது கூறிவிட்டு, பின்னர் அதிலிருந்து பின் வாங்குவது தேவையற்ற சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us