ஜூலை 19, 2010 12:00 AM
ஜூலை 19, 2010 12:00 AM
எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள் பலர், இந்தியாவில் உள்ள ஐ.ஐ.எம்.,களில் படிக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் அங்கு இடம் கிடைப்பதில்லை. இந்தியாவில் ஐ.ஐ.எம்.,களுக்கு இணையான மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. அங்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பினை பெறலாம். இங்கு மேலாண்மை கல்வி பயில்வது, ஐ.ஐ.எம்., படிப்பது போன்றே சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். அவை எந்தெந்த கல்வி நிறுவனங்கள் எனக் காண்போம்.
* பேக்கல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (எப்.எம்.எஸ்.,), டில்லி
* ஜேவியர் லேபர் ரிலேசன்ஸ் இன்ஸ்டிடியூட் (எக்ஸ்.எல்.ஆர்.ஐ.,), ஜாம்ஷெட்பூர்
* மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் (எம்.டி.ஐ.,), குர்கான்
* எஸ்.பி., ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்டு ரிசர்ச், மும்பை
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு(ஐ.ஐ.எப்.டி.,), டில்லி மற்றும் கோல்கட்டா
* இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி(ஐ.எம்.டி.,), நாக்பூர்
* சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் (எஸ்.ஐ.பி.எம்.,), புனே
* நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (என்.எம்.ஐ.எம்.எஸ்.,), மும்பை
* லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேசன்(லிபா), சென்னை
ஆகிய கல்வி நிறுவனங்கள் ஐ.ஐ.எம்.,களுக்கு இணையான தரமுடைய மேலாண்மை கல்வியை தருகின்றன. இந்தியாவில் எம்.பி.ஏ.,வில் சேருவதற்கு கேட் தேர்வு எழுத வேண்டும். குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு அந்த நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.
