ஆக 31, 2010 12:00 AM
ஆக 31, 2010 12:00 AM
சாதாரணமாகவே ஒரு வேலைக்கான அறிவிப்பு வரும்போது 'ஏற்கெனவே பணியிலிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று குறிப்பிடப்பட்டு
அறிவிப்பு வந்தால் அது அனைவரையும் ஆச்சரியப்படவே வைக்கும். ஆனால் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இந்த நிகழ்வை அதிகப் படுத்திவிட்டது. தற்போது இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் பணி நியமனங்களை மேற்கொள்ளும் போது ஏற்கெனவே பணி அனுபவம் உடையவர்களையே புதியவர்களைவிட அதிகமாக விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடி காலத்தில் பலருக்கும் பணி பறிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது நமக்கு நினைவிலிருக்கலாம். இந்தக் கடுமையான கால கட்டத்திலும் தங்கள் பணிகளை தக்க வைத்துக் கொண்டவர்கள் மிகவும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள் என்று பெரும்பான்மையான நிறுவனங்கள் நம்புவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனால் தற்போது வேலை தேடுபவர்களின் நிலை கவலைக்குரியதாக மாறி வருவதே உண்மையாகும்.
இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாட்டில், வேலையில்லாதோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தால்தான் நாடு முழு வளர்ச்சி அடைய முடியும். ஆனால் வேலை வாய்ப்பாளர்கள் ஏற்கெனவே பணியிலிருப்போரையே தொடர்ந்து குறி வைப்பது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் வேலை வாய்ப்பு சந்தையில் குழப்பமான நிலை நிலவுகிறது.
