தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிரிட்டன் கல்வி விசா கெடுபிடி

பிரிட்டன் கல்வி விசா கெடுபிடி

பிரிட்டன் கல்வி விசா கெடுபிடி


ஆக 31, 2010 12:00 AM

ஆக 31, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 31, 2010 12:00 AM ஆக 31, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாடுகளிலிருந்து தனது நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முனைப்பாக உள்ளது பிரிட்டன். எந்த நாட்டுக்காரரும், ஏஜன்டுகளும் தனது விசா நடைமுறைகளை தவறாக பயன்படுத்தாமல் விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அந்த நாட்டு குடியுரிமை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்குள் குடியேற பல வழிகளைக் கடைப்பிடித்து முறைகேடாக உள்ளே நுழைபவர்களில் அதிகமாக இருப்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தவர்கள் தான். இவர்களுக்குத் தான் பிரிட்டனின் குடியுரிமை அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் எப்போதும் திறமையானவர்களுக்கும் சிறப்பாக முதலீடு செய்பவர்களுக்கும் முக்கியத்துவம் தரும் தனது நாட்டில் அவர்களுக்கு எப்போதும் வரவேற்பு காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில போலிஸ் முறை கேடாக பிரிட்டனுக்குக் குடியேற விரும்புபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதில் சிறப்பான ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனிலுள்ள பல பஞ்சாப் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உறவினர்கள் வருகின்றனர்.

அவர்களுக்கு பிரிட்டன் உடனடியான விசாக்களைத் தந்து வருகிறது. அதே போல பிரிட்டனின் சிறப்பான கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காக முறையான விசா கோரும் இந்திய மாணவருக்கும் உடனடியாக விசாக்கள் தரப்படுகின்றன. எனவே முறைகேடாக பிரிட்டனுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us