செப் 06, 2010 12:00 AM
செப் 06, 2010 12:00 AM
பக்கவிளைவுகள் மிகவும் குறைவாக உள்ள மருத்துவம் ஆயுர்வேதம். இத்துறையின் மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. இந்த படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்களை காண்போம்.
* எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,பல்கலைக்கழகம், காஞ்சிபுரம்: இக்கல்வி நிறுவனத்தில் பி.ஏ.எம்.எஸ்., என்ற இளநிலை படிப்பு வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு: www.kanchiuniv.ac.in
* எஸ்.டி.எம்., ஆயுர்வேதக் கல்லூரி, உடுப்பி: இங்கு பி.ஏ.எம்.எஸ்., என்ற இளநிலை படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு: sdminstitutions.org
* வைத்தியரத்தினம் ஆயுர்வேத கல்லூரி, திருச்சூர்: கேரளா பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பி.ஏ.எம்.எஸ்., படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. விவரங்களுக்கு: www.vaidyaratnamcollege.org
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேதா, ஜெய்ப்பூர்: இங்கு ஆயுர்வேத மருத்துவத்தின் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு: nia.nic.in
* குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகம், ஜாம்நகர்: இங்கு இளநிலை, எம்.டி.,, மற்றும் பி.எச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு: ayurveduniversi-ty.edu.in
* ஆர்யா வைத்தியசாலை, கேரளா: இங்கு பி.ஏ.எம்.எஸ்., என்ற இளநிலை படிப்பு வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு: www.aryavaidyasala.com
