தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தரமான உயர்கல்வி கிடைக்க...

தரமான உயர்கல்வி கிடைக்க...

தரமான உயர்கல்வி கிடைக்க...


அக் 05, 2010 12:00 AM

அக் 05, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 05, 2010 12:00 AM அக் 05, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் தணிக்கை மற்றும் தரமதிப்பீடு செய்வது கட்டாயமாக்கப் படவிருக்கிறது.

தர உறுதிப்படுத்துதல் அமைப்பாக தமிழ் நாடு மாநிலக் கல்வித் தணிக்கை மற்றும் தரமதிப்பீட்டு மன்றம் விளங்குகிறது. கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் இம்மன்றத்தின் தணிக்கை மற்றும் தரமதிப்பீட்டின் கீழ் வருகின்றன.

நோக்கங்கள்
இம்மன்றத்தினாலும், பிற தரமதிப்பீடு நிறுவனங்களாலும் கல்வி நிறுவனங்கள் தரமதிப்பீடு செய்து கொள்ள ஊக்குவித்தல் மற்றும் வசதி செய்து கொடுத்தல். இந்திய அரசு விதிமுறைகளின் கீழ் தமிழகத்தில் இயங்கும் தரமதிப்பீட்டு நிறுவனங்களை கண்காணித்தல் மற்றும் அனுமதி வழங்குவதற்கான முறைகளை உருவாக்குதல்.

தரமதிப்பீடு தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் கையேடுகள், விளக்கவுரைகளை உருவாக்கி வெளியிடுதல். வேகமாக தரமதிப்பீடு மேற்கொள்வதற்காக கல்லூரிகளில் விளக்கவுரைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல். மாநில உயர் கல்வி நிறுவனங்களுக்கும், நாக் உள்ளிட்ட தரமதிப்பீட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தமிழக அரசு உள்ளிட்டவற்றுடனான தரம் தொடர்பான விவகாரங்களுக்கான அதிகாரப்பூர்வ மன்றமாக செயல்படுதல்.

நாக் போன்ற தேசிய அளவிலான தரமதிப்பீடு நிறுவனங்களுக்கும், தமிழகத்தில் உள்ள தரமதிப்பீடு செய்யும் தேசிய மற்றும் மாநில நிறுவனங்களுக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுதல். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் தர மதிப்பீட்டு செல்களை உருவாக்கவும், அவை ஆண்டு தோறும் அறிக்கை வெளியிடவும் வசதி செய்தல் மற்றும் கண்காணித்தல்.

பாடத்திட்டத்தில் உள்ள புதுமைகள், கற்பித்தல் கற்றல் முறைகள் மற்றும் தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான பங்களிப்பு ஆகிய தர மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். குறிப்பிட்ட கால இடைவெளியில், கல்வி நிறுவனங்களுக்கு இடையில் உள்ள தர வேறுபாடுகளை அறிந்து, தமிழக அரசின் கல்விக் கொள்கைகளுக்கு இணங்க, வருடாந்திர உயர்கல்வி நிதி ஒதுக்கீட்டுக்கான புதிய திட்டங்களை வகுத்தல் மற்றும் அமல் செய்தல். இவைதவிர, கல்வி நிறுவனங்கள் நிர்வாக தரத்தினை எட்டுவதற்கும், நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவதையும்தான் தர உறுதிப்படுத்துதல் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாணவர் ஆதரவு சேவைகள், உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு, வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள்,  கருத்தரங்குகள் ஏற்பாடு, ஆசிரியர்களின் தகுதி, முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களின் செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்து உயர் கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீடு அமையும். பட்டங்களை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டங்களில், கல்விநிறுவனத்தின் பெயர், அந்நிறுவனம் தரமதிப்பீடு செய்யப்பட்டதா இல்லையா என்பதை குறிப்பிட வேண்டும். இதனால் ஒவ்வொரு கல்வி நிறுவனமும், தரமதிப்பீடு பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

-பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us