தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/உங்கள் மேன்மையை மேம்படுத்துங்கள்...

உங்கள் மேன்மையை மேம்படுத்துங்கள்...

உங்கள் மேன்மையை மேம்படுத்துங்கள்...


அக் 11, 2010 12:00 AM

அக் 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 11, 2010 12:00 AM அக் 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்மில் பலர் தற்போது உள்ள நிலைமையில் இருந்து இன்னும் அதிகமாக மேம்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பர். நாம் பெற்றிருக்கும் மகிழ்ச்சி, அழகு, செல்வம், அறிவு, வெற்றி, அன்பு, மற்றவர்களிடம் நாம் பெற்றிருக்கும் பெயர், படிக்கும் பாடம், செய்யும் தொழில், நம்முடைய உறவுகள் என அனைத்திலும் தற்போதைய நிலையை விட மேம்பட்டு இருக்க வேண்டும் என விரும்புவோம்.

ஆனால் நாம் அதில் வெற்றி காண இயலாமைக்கு முக்கிய காரணம், நம்முடைய மனப்பான்மையை அடக்கியாள இயலாததாகும். நம்முடைய மேன்மையை மேலும் மேம்படுத்த சில வழிகளை இங்கு காண்போம்.

* உங்களை விட மேம்பட்ட நிலையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கையில் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையும், போதாமை குணமும் ஏற்படும்.

* உங்களுடைய செயல்களில் நீங்களே குற்றம் காணாதீர்கள்.

* தற்போது நீங்கள் பெற்றிருக்கும் நிலைமையை எண்ணி மிகவும் பெருமை கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களில் இருந்து முரண்பட்டதாக தெரிந்தாலும் இந்த எண்ணமே உங்களை மேம்படுத்த முதற்படியாக விளங்கும்.

* உங்களிடம் உள்ள நல்ல குணங்களை பட்டியலிடுங்கள். உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

* உங்களுடைய எண்ணங்களில் உண்மையாக இருங்கள். உங்களுடைய எண்ணங்கள் தகுதியில்லாததாக தோன்றினால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

* உங்களுடைய முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அவற்றிலிருந்து உங்கள் குறைகளை அறியுங்கள். அது அடுத்த கட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

* வெற்றி, தோல்வி இரண்டையும் மனஅமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* வாழுங்கள், மற்றவரை வாழ விடுங்கள்.

* ஒருவர் மற்றவரை விட தாழ்ந்தவரும் இல்லை, மேம்பட்டவரும் இல்லை என்ற எண்ணத்தை மனதில் பதிய வையுங்கள். ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கென்று தனித்துவம் பெற்றிருப்பர்.

* அதிகாரத்தை கொண்டு கலகம் செய்யாதீர்கள். நட்பானவராக திகழுங்கள்.

* அளவான பொறுமை கொள்ளுங்கள்.

* நீங்கள் செய்த குற்றங்களையும், தவறுகளையும் அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்.

* மற்றவர்களை இழிவுபடுத்தாதீர்கள்.

* அவசியமான செயல்களுக்கு மட்டும் திட்டமிட்டு செயல்படுங்கள்.

* வாக்குவாதத்தினால் ஒரு செயலில் வெற்றி காண இயலாது. மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு செவி கொடுங்கள். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.

* வெளித்தோற்றத்தின் அடிப்படையில் மற்றவர்களை எடை போடாதீர்கள்.

மேற்கூறிய சில வழிகளை கடைபிடித்து உங்களுடைய மேன்மையை மேம்படுத்த முயலுங்கள். வெற்றி காணுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us