தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கேட் ஆர்வம் குறைகிறதா...

கேட் ஆர்வம் குறைகிறதா...

கேட் ஆர்வம் குறைகிறதா...


நவ 11, 2010 12:00 AM

நவ 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 11, 2010 12:00 AM நவ 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களில் அடுத்ததாக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., உள்ளிட்ட மேலாண்மை படிப்புகளை படிக்க வேண்டும் என்பது அதிகமான மாணவர்களின் லட்சியம் மற்றும் விருப்பமாக இருக்கும். இதனால் இந்நிறுவனங்களில் சேர்வதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் "கேட்' நுழைவுத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது மாணவர்களிடம் இத்தேர்வுக்கான ஆர்வம் குறைந்து வருவதாக தெரிகிறது. இதற்கு இளநிலை படிப்பை முடித்தவுடன் மாணவர்கள், முதுகலை படிப்பை தொடர்வதற்கு பதிலாக பெரும்பாலான மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் சேர விரும்புவதே முக்கிய காரணம். 2009ம் "கேட்' நுழைவுத்தேர்வு கடந்த அக்., 27ம் தேதி நாடு முழுவதும் துவங்கியது. இத்தேர்வு வரும் நவ., 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

40 ஆயிரம் மாணவர்கள் குறைவு
2009ம் ஆண்டு இத்தேர்வுக்கு 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்தாண்டு 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் (மொத்தம் இந்தாண்டு 2 லட்சத்து 6 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன). எனவே சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விண்ணப்பிக்கப் பட்டுள்ளன.

விண்ணப்பித்த 2,04,000 மாணவர்களில் 1,22,000 பேர் இன்ஜினியரிங் மாணவர்கள். 30,248 பேர் வணிகவியல் பிரிவு, பி.பி.ஏ., முடித்தவர்கள் 21,809 பேரும், 2,421 பேர் உயிரியல் துறையையும் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா முதலிடம் மாநிலங்கள் வாரியாக பார்க்கும் போது அதிகளவிலான மாணவர்கள் (30,296) மகாராஷ்டிராவில் இருந்தும், 2வதாக டில்லியில் (19,931) பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளன. விண்ணப்பித்த மொத்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் , 26 சதவீதம் பேர் பெண்கள்.

9 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் 78 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்று வருகின்றன. தேர்வுக்காக 240 லேப்களில் மொத்தம் 9 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us