ஜன 04, 2011 12:00 AM
ஜன 04, 2011 12:00 AM
இயந்திர மின்நுட்பவியல் (மெக்கட்ரானிக்ஸ்) என்பது மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கன்ட்ரோல் இன்ஜினியரிங் மற்றும் சிஸ்டம் டிசைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வாய்ந்த துறையாகும். இந்த படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
* எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை இப்பல்கலை.யில் பி.டெக்., மற்றும் பிஎச்.டி.,பிரிவில் இத்துறையின் கீழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு srmuniv.ac.in
* சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் இக்கல்வி நிறுவனத்தில், இத்துறையின் கீழ் பி.டெக்., படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வின் அடிப்படையில் 30 சதவீத சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.sastra.edu
* கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, ஈரோடு மெக்கட்ரானிக் இன்ஜினியரிங்கில் பி.இ., மற்றும் எம்.இ., படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.kongu.edu
* மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மணிப்பால் இங்கு, நான்கு வருட பி.இ., பிரிவில் இத்துறை உள்ளது. இக்கல்வி நிறுவனத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.manipal.edu
* குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை இக்கல்லூரியில் நான்கு வருட பி.இ., மற்றும் 3 வருட லேட்டரல் என்ட்ரியில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு www.kct.ac.in
