தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இக்னோவின் பேஷன் படிப்புகள்

இக்னோவின் பேஷன் படிப்புகள்

இக்னோவின் பேஷன் படிப்புகள்


ஜன 17, 2011 12:00 AM

ஜன 17, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 17, 2011 12:00 AM ஜன 17, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இக்னோ எனப்படும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் தொலை நிலைக் கல்வி முறையில் தரம் வாய்ந்த பல படிப்புகளைத் தந்து வருகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலை தூரக் கல்வி மூலமாக மிகச் சிறந்த தரம் வாய்ந்த படிப்புகளை இது நடத்தி வருவதை அறிவோம்.

ரெகுலர் படிப்புகளுக்கு இணையான படிப்புகளாக இவை கருதப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட 36 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகம் பியர்ல் அகாடமி ஆப் பேஷன் என்ற புகழ் பெற்ற பேஷன் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தொலை தூரக் கல்வி முறையில் பேஷன் டெக்னாலஜி படிப்பை நடத்திவருகிறது.

பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டிசைன் மற்றும் பேஷன் மெர்க்கண்டைசிங் அண்ட் புரடக்ஷன் பிரிவுகளில் புதிய பாட முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு மற்றும் 4 ஆண்டு பட்டப் படிப்பு இதன் படி தரப்படவுள்ளது. இதற்கான தொடர்பு வகுப்புகள் பல இடங்களில் பியர்ல் அகாடமியால் நடத்தப்படவுள்ளன. தேர்வுகளை இக்னோ நடத்தி சான்றிதழ் வழங்கிடும். தேர்ச்சி பற்றிய விபரங்களை பியர்ல் அகாடமி முடிவு செய்யும்.

இது பற்றிய முழு விபரங்களை www.ignou.ac.in  தளத்தில் பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us