ஜன 17, 2011 12:00 AM
ஜன 17, 2011 12:00 AM
சென்னையில் உள்ள சதர்ன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட் அண்டு டிசைன் கல்வி நிறுவனத்தில், சிற்பக்கலை டிப்ளமோ, அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த டிப்ளமோ படிப்புகளில் களிமண், மரம், மெழுகு ஆகிய வற்றில் சிற்பங்கள் வடிக்கும் கலை கற்றுத்தரப்படுகிறது. அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் மனித உருவங்களை உருவாக்குவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேர்ந்த கலைஞர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த சிற்பக்கலைஞர்களை அழைத்து சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புகளில் சேர, பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்புகளில் சேர, ஆர்ட் அண்டு டிசைன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை இந்த கல்வி நிறுவன இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த டிப்ளமோ படிப்பு முடிப்பவர்களுக்கு கலை இயக்குநர், சிற்பக்கலை ஆலோசகர், அருங்காட்சியக காப்பாளர், கலை திறனாய்வாளர் போன்ற பணி வாய்ப்புகள் உள்ளன. தனியாக சிற்பக்கலைக் கூடம் வைத்து சுயவேலை வாய்ப்பையும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு www.siad.in/ போன் 044-42109910
